Published:Updated:

பீகார்: லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ திடீர் சோதனை!

சிபிஐ அதிரடி சோதனை! ( ட்விட்டர் )

பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

பீகாரில் ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக, லாலு பிரசாத் யாதவின் உதவியாளர் சுனில் சிங் உள்ளிட்ட ஆர்.ஜே.டி தலைவர்கள் தொடர்புடைய இடங்களில் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) சோதனை மேற்கொண்டுவருகிறது.

பாட்னாவில் ஆர்.ஜே.டி முன்னாள் எம்.எல்.சி சுபோத் ராய் வீடு மற்றும் நில மோசடி தொடர்பாக ஆர்.ஜே.டி தலைவர்கள் சுனில் சிங், அஷ்பாக் கரீம், ஃபயாஸ் அகமது ஆகியோரின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ சோதனை
லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ சோதனை
ட்விட்டர்

இந்தச் சோதனை குறித்து ஊடகங்களிடம் பேசிய ஆர்.ஜே.டி எம்.பி மனோஜ் ஜா, "இது சி.பி.ஐ சோதனை என்று கூறுவதில் பயனில்லை, இது பாஜக-வின் சோதனை. அவர்கள் இப்போது பாஜாக-வின் கீழ் வேலை செய்கிறார்கள்'' என்றார்.

பீகார் சட்டப்பேரவையில் இன்று நிதிஷ் குமார் தலைமையிலான அரசுமீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.