Published:Updated:

`சென்டாக் வழக்கு; ரூ.5 கோடி கட்டுமான ஊழல்!'-புதுச்சேரி சி.பி.ஐ கிளையின் பின்னணியை விவரித்த கிரண்பேடி

புதுச்சேரியில் சி.பி.ஐ கிளை அமைக்க மத்திய சி.பி.ஐ இயக்குநரகம் அனுமதி அளித்திருப்பது அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களைக் கொண்ட புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.ஐ அலுவலகம் அமைக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்களும் ஆளுநர் கிரண் பேடியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில்தான், புதுச்சேரியில் சி.பி.ஐ கிளை அலுவலகம் அமைக்க சி.பி.ஐ இயக்குநரகம் இசைவு தெரிவித்துள்ளது.

சென்டாக்
சென்டாக்
அ.குரூஸ்தனம்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், `4 பிராந்தியங்களைக் கொண்டிருக்கும் புதுச்சேரியில் மத்திய அரசின் வரிவசூல் அலுவலகங்கள் அமைந்திருக்கின்றன. மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு அதிகளவு நிதியைக் கொடுத்து வருகிறது. குறைவான வரியினால் அதிகமான மக்கள் பலன் பெறுகின்றனர்.

குறிப்பாக வாகனப் பதிவுக்கு சாலை வரியும் சரக்கு மற்றும் சேவை வரியும் குறைவு. இதனால் இதர மாநிலத்தில் இருப்பவர்கள் ஈர்க்கப்பட்டு அதைப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பதால், பல்வேறு அரசுத் துறைகள் லஞ்சத்துக்கு திரும்பும் சூழல் ஏற்படுகிறது. சென்னையிலிருந்து புதுச்சேரியை கண்காணிக்க சில தடைகள் இருக்கின்றன. குறிப்பாக பணியாளர்கள் பற்றாக்குறை, நிர்வாகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

புதுச்சேரி சட்டப்பேரவை
புதுச்சேரி சட்டப்பேரவை

தற்போது புதுச்சேரியில் அமையவிருக்கும் சி.பி.ஐ கிளை அலுவலகம், ஊழலுக்கு எதிரான பணியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். புதுச்சேரி கிளை அலுவலகம் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தின்கீழ் செயல்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், ``ஊழல் புகார்கள், நில அபகரிப்பு, கட்டுமான விவகாரம், ஒப்பந்தங்கள், பத்திரப் பதிவுகள் தொடங்கி ஊழல் குற்றச்சாட்டுகள் வரை அனைத்து அலுவலகங்களிலும் சி.பி.ஐ நேரடியாக ஆய்வுசெய்து கண்காணிக்கும்.

சி.பி.ஐ
சி.பி.ஐ

புதுச்சேரியில் ஊழல் செய்யும் அதிகாரிகளை பொறிவைத்துப் பிடிக்க இந்தக் கிளை அவசியம் தேவை. எனது கோரிக்கையை ஏற்ற பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. என் கோரிக்கையின்படிதான் புதுச்சேரியில் சி.பி.ஐ கிளை அமைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர்களின் வருடாந்திர மாநாட்டில் புதுச்சேரியில் சி.பி.ஐ-யின் கிளை அமைக்கும் கோரிக்கை பலமுறை கோரப்பட்டது. புதுச்சேரியில் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது புதுச்சேரி மக்கள் கையில் ஆதாரங்களுடன் சி.பி.ஐ அலுவலகத்தை நேரடியாக அணுக முடியும். சி.பி.ஐ கிளை அமைப்பானது மக்கள் மனதில் நம்பிக்கையைத் தூண்டும். மேலும், சி.பி.ஐ தனிப்பட்ட அமைப்பு என்பதால், ஆதாரங்கள் இருந்தால் அது விசாரிக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு எழும்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

மருத்துவ மாணவர் சேர்க்கையான சென்டாக் வழக்கை சி.பி.ஐ விசாரித்ததை நினைவுகூர்வதும் அவசியம். அப்போது அதிகாரிகள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. தற்போது ஏனாமுக்கு நேரடி ஆய்வுக்குச் சென்றபோது சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி ரூ.5 கோடி கட்டுமானங்கள் கட்டியதும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. அந்தச் சம்பவமும் சி.பி.ஐ அமைப்பின் கிளை அலுவலகத்தைக் கோருவதற்கு உதவியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு