Published:Updated:

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

மத்திய அணுசக்தித் துறை பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக எழுத்துப்பூர்வ அறிக்கை மாநிலங்கள் அவையில் கொடுக்கப்பட்டுள்ளது.

நியூட்ரினோ
நியூட்ரினோ

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்தநிலையில், மத்திய அணுசக்தித் துறை நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் ஜித்தேந்தர் சிங் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

நியூட்ரினோ
நியூட்ரினோ

பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து, வான் வெளியில் இருந்து வரும் கண்களுக்குப் புலப்படாத நியூட்ரினோ கற்றைகளை ஆய்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆய்வு மையம் அமைக்க தடையாணை பெற்றார்.

மேலும், தமிழக அரசின் மாசுக் கட்டுப்பட்டு வாரியத்தின் அனுமதி இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது எனவும் திர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு, நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேகம் காட்டுகிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

மத்திய அணுசக்தித் துறை பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக எழுத்துப்பூர்வ அறிக்கை மாநிலங்கள் அவையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நியூட்ரினோ திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என கூறி வருகிறது மத்திய அரசு.