Published:Updated:

இலங்கைக்கு உதவி... தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு! - நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். பொருள்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவி... தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு! - நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். பொருள்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரச் சிக்கலில் தவித்துவருகிறது. ஒவ்வொரு பொருள்களின் விலையும் விண்ணைத் தொடும் நிலையில் இருக்கிறது. வேலையின்மை, சம்பளக் குறைவு உள்ளிட்டவற்றால் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர் மக்கள். இதனால், ராஜபக்சே அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழர் பகுதிகளில் இருப்பவர்கள், கடந்த காலங்களில் கடுமையான போர்களை பார்த்துப் பழகியவர்கள் என்பதால், சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.

இலங்கை போராட்டம்
இலங்கை போராட்டம்
AP

இருந்தபோதிலும், ஈழத் தமிழகர்களில் சிலரும், தமிழ் மீனவர்களில் சிலரும் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்திய அரசு பெட்ரோல், டீசல், மருந்துவகைகள், உணவு வகைகள் என பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொருட்களை நட்பு ரீதியாக இலங்கைக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமரிடம் வைத்தக் கோரிக்கைகளில், இலங்கை மக்களுக்கு உதவுவதற்குத் தமிழக அரசுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். எனினும், மத்திய அரசு அதற்கு பதில் ஏதும் அளிக்கவில்லை. அதனை மீண்டும் வலியுறுத்தும் விதமாக ஏப்ரல் 29-ம் தேதி சட்டமன்றத்திலும் தனித் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் முதல்வர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து தி.மு.க தரப்பில் பேசியபோது, ``மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்தும் ஒரு மாநிலமாக தமிழகம் இருப்பதால், வெளியுறவுத் தொடர்பான விஷயங்களில் சுயமாக முடிவெடுக்க முடியாத சூழல் உள்ளது. மத்திய அரசிடம் அனுமதி பெறாமல், மற்ற நாடுகளுக்கு நாம் உதவிகூட செய்ய முடியாது. அதுதான் இங்கும் நடந்துவருகிறது.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

மனிதாபிமான அடிப்படையில் இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும், காலத்தே உதவி செய்திட அனுமதி வழங்கக்கோரி தீர்மானத்தை நிறைவேற்றினார் முதல்வர். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக, 80 கோடி ரூபாயில் 40,000 டன் அரிசியும், 28 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்களும், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடரும் வழங்கத் தமிழக முனைப்புடன் இருப்பதாக முதல்வர் சட்டமன்றத்திலேயே பேசினார்” என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜனிடம் பேசியபோது, ``ஏற்கெனவே 7,850 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது. மேற்கொண்டு, 12,000 முதல் 15,000 கோடி ரூபாய்க்கான உதவிகளைச் செய்யவிருக்கிறது. இதுபோக, மலையக, யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு கட்டிக்கொடுக்கப்படும் வீடுகளின் பணியும் முடியும் நிலையில் உள்ளது. ரயில், பேருந்து, விமான நிலையங்கள் உள்ளிட்டவைகளைச் சீரமைத்தும் கொடுக்கப்படுகிறது. மத்திய அரசு இன்னொரு நாட்டுக்கு உதவுவது என்பது வாடிக்கையானது. அதுவே, நாட்டிலுள்ள ஒரு மாநிலம் மட்டும், இன்னொரு நாட்டுக்கு உதவ வேண்டுமெனறால் சாதாரண காரியமல்ல. இந்த விவகாரத்தில் சிறிய பிசிரு தட்டினாலும் பழியை இந்திய அரசுதான் சுமந்திட வேண்டும்.

கரு.நாகராஜன்
கரு.நாகராஜன்

தி.மு.க-வும், காங்கிரஸும் கூட்டணி வைத்துக்கொண்டு ஈழத்தமிழர்களைக் கொன்றுகுவித்த வரலாறுகளை அம்மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எனினும், இப்போதாவது உதவிசெய்ய வேண்டும் என்கிற எண்ணம் தி.மு.க-வுக்கு வந்ததே என்று நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்றார்.

இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

இதன் காரணமாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி என மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ``இலங்கை மக்களுக்கு உதவவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றதற்கு நன்றி. இதுபோன்ற மனிதாபிமான உதவிகள் இரு நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்த உதவும்” என பதிவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism