Published:Updated:

``விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயன்றுவருகிறது” - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

"கொரோனா, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவையே விலை உயர்வுக்குக் காரணம்." - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

``விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயன்றுவருகிறது” - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

"கொரோனா, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவையே விலை உயர்வுக்குக் காரணம்." - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

Published:Updated:
பியூஷ் கோயல்

டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்களின் பல கேள்விகளுக்கு விளக்கமளித்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அப்போது விலைவாசி உயர்வு தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டபோது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயன்றுவருகிறது. கொரோனா, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவையே விலை உயர்வுக்குக் காரணம்.

பெட்ரோல் , டீசல்
பெட்ரோல் , டீசல்
ட்விட்டர்

அத்தியாவசியப் பொருள்களான பருப்பு முதலியவற்றுக்கு இறக்குமதி வரியைக்கூட ரத்து செய்துள்ளோம். உலகுக்கே நாம் உணவு வழங்கத் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் நம்மிடம் போதுமான உணவு தானியங்கள் இருக்கின்றன.

கடந்த நிதியாண்டில் 70 லட்சம் டன் கோதுமையை நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த நிதியாண்டில் அதை 100 லட்சம் டன்னாக ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். அதனால்தான் உலக நாடுகள் தானிய ஏற்றுமதிக்கு இந்தியாவை நம்பியுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism