Published:Updated:

``சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது; பொதுத்துறையே நடத்த வேண்டும்!" - ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

``தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம், அந்த ஆலைக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதுதான்." - ராமதாஸ்

``சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது; பொதுத்துறையே நடத்த வேண்டும்!" - ராமதாஸ் வலியுறுத்தல்

``தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம், அந்த ஆலைக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதுதான்." - ராமதாஸ்

Published:Updated:
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சேலம் இரும்பாலையை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதை தமிழகம் அனுமதிக்காது என்றும், பொதுத்துறையே நடத்த வேண்டும் அதனை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கான நிதி ஒப்பந்தப்புள்ளிகள் ஜனவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படக்கூடும் என்று நம்புவதாகவும் மத்திய எஃகு உருக்குத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்திருக்கிறார். சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்டுவதற்கு பதிலாக அதை விற்பனை செய்ய மத்திய அரசு முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட வினாக்களுக்கு விடையளித்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, `சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி. மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத்துறை அமைச்சகமும் இதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதற்காக முதலீட்டாளர்களை இரும்பாலைக்கு அழைத்து செல்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், அதற்கான பாதுகாப்புச் சூழலை மாநில அரசு ஏற்படுத்தித் தரவில்லை. ஆனாலும் அதற்கான நிதி ஒப்பந்தப்புள்ளிகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது ஜனவரி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் நிகழும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.

ஜோதிராதித்ய சிந்தியா
ஜோதிராதித்ய சிந்தியா

சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்கும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவதையே அமைச்சர் சிந்தியாவின் பதில் உணர்த்துகிறது. சேலம் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 4,000 ஏக்கர் நிலங்களை, ஒரு ஏக்கர் ரூ.5,000-க்கும் குறைவான விலையில் கொடுத்ததால்தான் சேலம் இரும்பாலை உருவானது. இத்தகைய பின்னணி கொண்ட சேலம் இரும்பாலையை உலகத்தரம் கொண்ட ஆலையாக தரம் உயர்த்துவதுதான் அந்த ஆலை அமைவதற்காக சேலம் மக்கள் செய்த தியாகங்களுக்கு மத்திய அரசு செய்யும் பதிலுதவியாகும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய அரசு, `நவீன மயமாக்கல் மற்றும் விரிவுபடுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த ஆலையில் செயில் நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்தும் 5 ஆண்டுகளாக சேலம் இரும்பு ஆலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால்தான் ஆலையை தனியார் மயமாக்க அரசு தீர்மானித்திருக்கிறது' என்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறது.

சேலம் இரும்பாலை
சேலம் இரும்பாலை

சேலம் இரும்பாலையை நவீனமயமாக்கி புத்துயிரூட்டுவதற்கான வாய்ப்புகள் ஆயிரம் இருந்தாலும் கூட, அதை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம், அந்த ஆலைக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதுதான். மத்திய அரசின் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது. அதை தமிழகம் அனுமதிக்காது. இதை உணர்ந்து கொண்டு சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்டி இந்திய இரும்பு எஃகு நிறுவனத்தின் (செயில்) மூலம் பொதுத்துறை நிறுவனமாகவே நடத்த வேண்டும். ஒருவேளை சேலம் இரும்பாலைக்கு புத்துயிரூட்ட முடியாது என்றால், அந்த ஆலை அமைந்துள்ள 4,000 ஏக்கர் நிலங்களையும் அவற்றை வழங்கிய நில உரிமையாளர்களிடமே அரசு ஒப்படைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருக்கிறார்.