Published:Updated:

`ஊரடங்கை மீறியதாகக் கேரளாவுக்கு மத்திய அரசு கண்டனம்!'- இது பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPoll

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

ஊரடங்கை மீறியதாக கேரளாவுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி மக்களின் கருத்து இங்கே...

மத்திய அரசு, கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதுக்குமான ஊரடங்கை மே 3 வரை நீட்டித்துள்ளது. ஏப்ரல் 20-க்குப் பிறகு இதில் ஒரு சில தளர்வுகளைப் பரிந்துரைத்தாலும், ஊரடங்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் தளர்வு நடவடிக்கைகள் ஏதுமின்றி மே 3 வரையிலுமே முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, சில இடங்களில் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது. இதற்குக் காரணமாக, அங்கே கொரோனா பாதிப்பு குறைந்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்குள்ள 14 மாவட்டங்களில், 4 மாவட்டங்கள் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் இருப்பதால், மீதி மாவட்டங்களில் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள அரசின் இந்தச் செயலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காரணம், ஒப்புதல் அளித்த தளர்வுகளைத் தாண்டி சில நடவடிக்கைகளைக் கேரள அரசு அனுமதித்திருப்பதாகவும், இது மத்திய அரசின் ஆணையை மீறுவதாகவும் அதை நீர்த்துப் போகச் செய்வதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது குறித்து உங்களின் கருத்து என்ன?" என்று மக்களிடம் விகடனின் சமூக வலைதளங்கள் மற்றும் தளத்தில் கேட்டிருந்தோம். அதற்கு கிடைத்த பதில்கள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Twitter Poll
Twitter Poll

Helo App-ல் கிடைத்த முடிவுகள்

Helo Poll
Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களை வைத்து நமக்குக் கிடைத்த இறுதி முடிவுகள்

Vikatan Poll Results
Vikatan Poll Results
இது குறித்து மக்கள் பதிந்த கருத்துகளைக் கீழே கமெண்டில் பார்க்கலாம்.
அடுத்த கட்டுரைக்கு