Published:Updated:

ரூ. 5.5 லட்சம்.. ஒரே செட்டில்மென்ட்!- மீண்டும், காஷ்மீர் திரும்பிய குடும்பங்களுக்கு சலுகை

ஜம்மு - காஷ்மீரிலிருந்து மொத்தம் 36,384 குடும்பங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குடியேறியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் திரும்பிய மக்கள்
ஜம்மு - காஷ்மீர் திரும்பிய மக்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து ஜம்மு - காஷ்மீரில் குடியேறிய 5,300 குடும்பங்களுக்கு ஒரேகட்டமாக 5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 அரசியலமைப்புச் சட்டமும் ரத்து செய்யப்பட்டது. போராட்டம் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக, தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். படிப்படியாகக் காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிக்கொண்டிருக்கிறது.

மோடி
மோடி

கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து, ஜம்மு - காஷ்மீருக்குத் திரும்பும் காஷ்மீர் குடும்பங்களுக்கு ரூ. 5.5 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பிரிவினையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குடியேறிய 5,300 குடும்பங்கள் முதல்கட்டமாக காஷ்மீர் திரும்பியுள்ளன. இந்தக் குடும்பங்களுக்கு ஒரே செட்டில்மென்டாக ரூ. 5.5 லட்சம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `வரலாற்றுப் பிழை மத்திய அரசால் சரி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

நாடு பிரிவினையின்போது, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக ஜம்மு - காஷ்மீரிலிருந்து மொத்தம் 36,384 குடும்பங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குடியேறியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் காஷ்மீர் திரும்பி மறு வாழ்க்கை அமைத்துக்கொள்ள மத்திய அரசு ரூ.2,000 கோடி ஒதுக்கியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் தொகை ஜம்மு - காஷ்மீர் அரசு வழியாக, நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காட்டும் வரைபடம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை காட்டும் வரைபடம்

மீண்டும் குடியேறிய மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. தேர்தலில் போட்டியிட அனுமதி கிடையாது. பாராமிலிட்டரி போன்ற பிரிவுகளில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகளை மத்திய அரசு நடத்தும் கேந்திர வித்யாலயா போன்ற பள்ளிகளில் சேர்த்து எளிதாகப் படிக்க வைக்க முடியும். ஜம்மு - காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியேறிய மக்களுக்காக Jammu and Kashmir Sharanarthi Action Committee (JKSAC) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு அத்தனை குடும்பங்களையும் மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்த ரூ.9,200 கோடி செலவாகும் என மதிப்பிட்டுள்ளது.