Published:Updated:

குஜராத் கலவரம்: மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்; `காலனித்துவ மனநிலை' எனச் சாடிய மத்திய அரசு

அரிந்தம் பாக்சி ( ட்விட்டர் )

``இதுவொரு குறிப்பிட்ட மதிப்பிழந்த கதையை முன்வைக்க வடிவமைக்கப்பட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே ( A Piece of Propaganda) நாங்கள் நினைக்கிறோம்." - அரிந்தம் பாக்சி

குஜராத் கலவரம்: மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்; `காலனித்துவ மனநிலை' எனச் சாடிய மத்திய அரசு

``இதுவொரு குறிப்பிட்ட மதிப்பிழந்த கதையை முன்வைக்க வடிவமைக்கப்பட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே ( A Piece of Propaganda) நாங்கள் நினைக்கிறோம்." - அரிந்தம் பாக்சி

Published:Updated:
அரிந்தம் பாக்சி ( ட்விட்டர் )

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. `இந்தச் சம்பவங்களின்போது கலவரத்தைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’ என அப்போதைய குஜராத் முதல்வர் மோடிமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதற்கிடையே, இது தொடர்பாக மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது.

மோடி
மோடி

இந்த நிலையில், பி.பி.சி ஊடகம் குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து, ``India: The Modi Question" என்ற இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தைக் கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆவணப்படம் வெளியான அடுத்த நாளே யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, பி.பி.சி-யின் ஆவணப்படம் குறித்து விளக்கமளித்திருக்கிறார்.

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி
வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி

இது தொடர்பாக, ``இந்த ஆவணப்படம் இந்தியாவில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆவணப்படம், அதை உருவாக்கிய ஏஜென்சியின் பிரதிபலிப்பு. இதுவொரு குறிப்பிட்ட மதிப்பிழந்த கதையை முன்வைக்க வடிவமைக்கப்பட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே ( A Piece of Propaganda) நாங்கள் நினைக்கிறோம். அதோடு, ஒருபக்க சார்பு, புறநிலை இல்லாமை, தொடர்ந்து காலனித்துவ மனநிலை ஆகியவை அப்பட்டமாக இந்த ஆவணப்படத்தில் தெரிகின்றன. எனவே, இப்படிப்பட்ட ஒரு படத்தைக் கண்ணியப்படுத்த முடியாது" என அரிந்தம் பாக்சி கூறியிருக்கிறார்.