Published:Updated:

"இந்துக்களுக்கு எதிராகப் பேசுகிறேன் என திமுக-வுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் ராசா"- எல்‌.முருகன்

எல்.முருகன்

``மாநில அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களைப் பெற வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஜே.பி.நட்டா பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறாகப் பரப்பி வருகின்றனர்." - எல்.முருகன்

பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள்கள் பயணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை ஊட்டியிலுள்ள சேரிங்கிராஸ் பகுதிக்கு வந்த எல்.முருகனுக்கு பா.ஜக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக விருந்தினர் மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வளர்ச்சிப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, ஊட்டி காந்தள் பகுதியில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

எல்.முருகன்
எல்.முருகன்

பின்னர் மாலை நடைபெற்ற பா‌.ஜ.க ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ``மாநில அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களைப் பெற வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஜே.பி.நட்டா பேசியதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறாக பரப்பி வருகின்றனர். இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு கிடையாது. இரண்டுமே ஒன்றுதான். இந்துக்களுக்கு எதிராகப் பேசுகிறேன் என்ற பெயரில் எம்.பி ராசா தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.