Published:Updated:

`சட்டவிரோதச் செயல்பாடுகள்...’ - பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு

பி.எஃப்.ஐ

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை ஐந்தாண்டு காலத்துக்குச் சட்டவிரோத அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

`சட்டவிரோதச் செயல்பாடுகள்...’ - பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்த மத்திய அரசு

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளை ஐந்தாண்டு காலத்துக்குச் சட்டவிரோத அமைப்புகளாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

Published:Updated:
பி.எஃப்.ஐ

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் கிளைகளைப் பரப்பி, சிறுபான்மைச் சமூகத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டுவரும் அமைப்பாகக் கருதப்படுகிறது. பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களைத் தூண்டிவருவதாகக் குற்றம்சாட்டி, அதைத் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்திவந்தன. இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகிகளைக் கைதுசெய்திருக்கின்றனர்.

இதை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், மதச்சார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனையைக் கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும் எஸ்.டி.பி.ஐ., இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

பாஜக - அமித் ஷா, மோடி
பாஜக - அமித் ஷா, மோடி

இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது. நேற்று நடைபெற்ற சோதனைக்குப் பின்னர், நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்டோரைக் காவல்துறை கைதுசெய்தது.

அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அவற்றுக்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்திருக்கிறது. சட்டவிரோதப் பணிக்கான பணப் பரிவர்த்தனை, பிரதமர் மோடியைக் கொல்ல சதி எனப் பல்வேறு குற்றசாட்டுகளை அந்த அமைப்பின் மீது என்.ஐ.ஏ சுமத்தியிருக்கிறது.

‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு...
‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு...

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை நிறுவனங்கள் சமூக-பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக வெளிப்படையாகச் செயல்படுகின்றன. ஆனால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தீவிரவாத ரகசிய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றிவருகின்றனர். சமூகத்தின் ஒரு பிரிவினர் ஜனநாயகத்தின் கருத்தை குறைமதிப்புக்கு உட்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார்கள். நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அரசியலமைப்புக்கு முற்றிலும் அவமரியாதை செய்கின்றனர்" எனக் கூறப்பட்டிருக்கிறது.