Published:Updated:

``பாஜக மூத்த தலைவர்களுக்கு சவால்விடுகிறேன்..!" - மாநகராட்சி விவகாரத்தில் கொதித்த கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் ( ட்விட்டர் )

``கடந்த 15 ஆண்டுகளில் எம்.சி.டி-யில் என்ன பணிகள் நடந்திருக்கின்றன என்பதை பா.ஜ.க சொல்ல வேண்டும். ஒரே ஒரு வளர்ச்சிப் பணியையேனும் காட்டுங்கள் பார்க்கலாம்." - கெஜ்ரிவால்

டெல்லியில் MCD (Municipal Corporation of Delhi) தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காஜிபூர் குப்பைக் கிடங்கை இன்று பார்வையிட்டார். அப்போது, ​​கெஜ்ரிவாலுக்கு எதிராக நூற்றுக்கணக்கான பா.ஜ.க ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். அதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியினரும் பா.ஜ.க-வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஜிபூர் குப்பைக் கிடங்கைப் பார்வையிட்ட கெஜ்ரிவால்
காஜிபூர் குப்பைக் கிடங்கைப் பார்வையிட்ட கெஜ்ரிவால்
ட்விட்டர்

அதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "கடந்த 15 ஆண்டுகளில், மூன்று குப்பை மலைகளை, டெல்லிக்கு பா.ஜ.க கொடுத்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் எம்.சி.டி-யில் என்ன பணிகள் நடந்திருக்கின்றன என்பதை பா.ஜ.க சொல்ல வேண்டும். ஒரே ஒரு வளர்ச்சிப் பணியையேனும் காட்டுங்கள் பார்க்கலாம்... இதை பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களுக்குச் சவாலாகவேவிடுகிறேன். மேலும் டெல்லிக்குள் ஆம் ஆத்மி என்ன வேலை செய்தது என பா.ஜ.க என்னிடம் கேட்கிறது. இதை என்னிடம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை, இதற்கு பதிலை டெல்லி மக்கள்தான் கூறுவார்கள்.

காஜிபூர் குப்பை கிடங்கில் செய்தியாளர் சந்திப்பு
காஜிபூர் குப்பை கிடங்கில் செய்தியாளர் சந்திப்பு
ட்விட்டர்

உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லிக்கு வந்தபோது, டெல்லி எம்.சி.டி-க்கு நான் நிதி வழங்கவில்லை என்று குற்றம்சாட்டினார். நீங்கள் டெல்லியில் எம்.சி.டி-க்கு எவ்வளவு நிதி கொடுத்தீர்கள் என்று உள்துறை அமைச்சரிடம் கேட்க விரும்புகிறேன். டெல்லியை யூனியன் பிரதேசம் என்று சொல்லி தங்கள் பொறுப்பிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி எம்.சி.டி-யில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க., டெல்லியில் எங்கு பார்த்தாலும் குப்பைகளை பரப்பிவைத்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.