Published:Updated:

சந்திரசேகர ராவ் சரவெடிகள்...

சந்திரசேகர ராவ்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர ராவ்

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வினர் லிப் சர்வீஸ் மட்டுமே புரிவார்கள்; அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்

சந்திரசேகர ராவ் சரவெடிகள்...

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வினர் லிப் சர்வீஸ் மட்டுமே புரிவார்கள்; அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்

Published:Updated:
சந்திரசேகர ராவ்
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகர ராவ்

தெலங்கானா மாநிலத்தில் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சித் தொண்டர்கள், பா.ஜ.க தொண்டர்களைக் கடுமையாகத் தாக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. டி.ஆர்.எஸ் கட்சித் தொண்டர்களின் செயல்பாடுகள் மட்டுமல்ல... அந்தக் கட்சியின் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் வெளிப்படுத்தும் கருத்துகளிலும் அக்கட பூமியின் காரம் அள்ளும்! தனது அரசியல் எதிரிகளை வார்த்தை அம்பு எய்து தாக்குதல் தொடுப்பதில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். சமீபத்தில் பட்ஜெட்டுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்பில், “பா.ஜ.க மத்தியிலிருந்து தூக்கப்பட்டு, வங்கக் கடலில் வீசப்பட வேண்டும்” என்று அவர் வெடித்த சரவெடிச் சத்தம் டெல்லி வரை சூடாக்கியது. இதேபோல கடந்தகாலங்களில் அவரது சரவெடிப் பேச்சுகள் இங்கே...

“பா.ஜ.க-வினர் மாநில அரசைப் பற்றித் தேவையில்லாமல் தவறான கருத்துகளைப் பேசுவதை நிறுத்தாவிட்டால், அவர்களது நாக்குகள் வெட்டப்படும்!”

“தேர்தல் வந்துவிட்டால் போதும்... மோடி தாடியை வளர்த்துக்கொண்டு ரவீந்திரநாத் தாகூர்போல மாறிவிடுவார். தமிழகத்துக்குப் போனால் வேட்டி அணிகிறார். பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் என்றால் டர்பன் கட்டிக்கொள்கிறார். மணிப்பூருக்குப் போனால் மணிப்பூர் தொப்பி... உத்தரகாண்ட் போனால் உத்தரகாண்ட் தொப்பி... இது மாதிரி எத்தனை தொப்பிகளைத்தான் போடுவாரோ!”

சந்திரசேகர ராவ் சரவெடிகள்...

(குஜராத் மாடலைச் சுட்டிக்காட்டி) “வெளியே ஷெர்வானி உள்ளே ஒன்றுமில்லை!”

(போராட்டக்காரர்களை நோக்கி) “இங்கே இருக்க வேண்டுமானால் அமைதியாக இருங்கள். உங்கள் செயல்கள் என்னைத் தொந்தரவு செய்யாது. உங்களைப் போன்று பல நாய்கள் உள்ளன. நாங்கள் உறுதியாக இருந்தால் உங்களது சுவடே தெரியாது. நீங்கள் வெறும் தூசியாகிவிடுவீர்கள்!”

“2022 பட்ஜெட் ஒரு கோல்மால் பட்ஜெட்!”

``எந்த முட்டாள்கள் வரியை ஏற்றினார்களோ, அவர்கள்தான் குறைக்க வேண்டும்’’ (பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு சொன்னதற்கு...)

“நாட்டு மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய... நாட்டை முன்னேற்ற இந்தியா தனது அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்... அது பற்றி விவாதம் செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது!”

“காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வினர் லிப் சர்வீஸ் மட்டுமே புரிவார்கள்; அவர்கள் சொல்வது அனைத்துமே பொய்!”

“தெலுங்கு தேசக்கட்சி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இரண்டுமே ஆந்திரக் கட்சிகள்.

மக்களே, இவர்களைத் தெலங்கானாவைவிட்டு வெளியேற்றுங்கள்!”

“அனைவருக்கும் ராகுல் காந்தி ஒரு பஃபூன் என்று தெரியும்... அவர் நமக்குப் பெரிய சொத்து. அவர் எத்தனை முறை தெலங்கானா வருகிறாரோ, அதற்கு ஏற்றாற்போல் நமக்கு அதிக சீட்டுகள் கிடைக்கும்!”

“இந்த நாடு வக்கிரமான, தரித்திரம் பிடித்தவர்களால் ஆளப்படுகிறது!”

“நமது பெண்களைக் காக்கக்கூடிய கடமை எனக்கு உள்ளது. அதனால் அவர்களின் வேலை நேரம் இரவு 8 மணியோடு முடிவடைய இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.”

“பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் திரும்பத் திரும்பப் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிவந்தனர். ஆனால், இப்போது அவர்கள் குட்டு உடைந்துவிட்டது. இவர்கள் பிரிவினைவாத அரசியல்புரிகிறார்கள்!’’

(கொரோனா காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பத்திரிகையை நோக்கி...) “நல்லதை எழுத முடிந்தால் எழுதுங்கள். இல்லையேல் வீட்டுக்குப் போய் தூங்குங்கள். இப்போதாவது குறுக்கு புத்திக்காரர்கள் குணமடைய வேண்டும். உங்களுக்கு கொரோனா வர வேண்டும் என்று சாபம்விடுகிறேன்.”

(இரண்டு தெலுங்கு டி.வி சேனல்களைச் சுட்டிக்காட்டி...) ‘‘கழுத்தை உடைத்து தூக்கி எறிந்துவிடுவோம். தெலங்கானா சட்டசபையைப் பற்றித் தவறாகப் பேசும் எவராக இருந்தாலும் புதைத்துவிடுவோம். இந்த விளையாட்டையெல்லாம் அனுமதிக்க மாட்டோம். இதை இந்த மாநிலத்தின் முதல்வராகக் கூறுகிறேன்!’’

“மக்களே... ஊழல் அதிகாரிகளைச் செருப்பால் அடியுங்கள்!”

“அதிகாரிகள் கேட்டார்கள் என்று யாராவது லஞ்சம் கொடுத்தால், அவர்களைக் கொன்றுவிடுவேன்!”