Published:Updated:

`நம்பிக்கையை கைவிட்டு விடக் கூடாது' - `மான் கீ பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

மலையரசு

பிரதமர் மோடி இன்று மான் கீ பாத் நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களிடையே பேசினார்.

மோடி
மோடி

மான் கீ பாத் நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியில் நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, தண்ணீரை பாதுகாப்பதின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அதில், `` தண்ணீர் சேமிப்பு குறித்து மக்கள் என்னிடம் பகிர்ந்து உள்ளனர். மீடியாக்கள் தற்போது இதனை பெரிய இயக்கமாக நடத்தி வருகின்றன. ஆனால் அது மட்டும் போதாது.

மோடி
மோடி

தண்ணீர் சேமிப்பு குறித்து அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாக்களில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். விழாக்களில் தண்ணீர் சேமிப்பு குறித்து தெரு நாடகங்கள் என பல வழிகளில் விழிப்புணர்வு உண்டாக்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக சொந்த நீர் கொள்கையை மேகாலயா அரசு உருவாக்கி உள்ளது. அரியானாவில் குறைந்த நீர் பயன்படுத்தப்படும் பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன.

இதன் மூலம் விவசாயிகளுக்கு இழப்பு குறைகிறது" என்று பேசியவர், ``சந்திராயன்-2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் நமது விஞ்ஞானிகள் உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் என்பது நிரூபணமாகி உள்ளது. பின்னடவை சந்தித்த போதும், இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக சந்திரயான்-2வை ஏவி சாதனை படைத்தனர்.

சந்திராயன்-2
சந்திராயன்-2

இதுபோன்ற முயற்சிகள் இளைஞர்களை அறிவியல் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை நோக்கி கொண்டு செல்ல ஊக்கப்படுத்தும். நம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை சந்திரயான்-2 கற்றுக் கொடுத்திருக்கிறது. நமது திறமைகள் மீது எப்போதும் நம்பிக்கை வேண்டும். தடங்கல்களைக் கண்டு ஒரு போதும் நம்பிக்கையை கைவிட்டு விடக் கூடாது" என்றும் பேசினார்.