Published:Updated:

தமிழக அமைச்சரவை இலாக்கா மாற்றம்: என்ட்ரியாகும் TRB... துறை மாற்றப்படுகிறாரா PTR?!

பி.டி.ஆர் - தங்கம் தென்னரசு

`தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் நடைபெறும்’ என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Published:Updated:

தமிழக அமைச்சரவை இலாக்கா மாற்றம்: என்ட்ரியாகும் TRB... துறை மாற்றப்படுகிறாரா PTR?!

`தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் நடைபெறும்’ என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

பி.டி.ஆர் - தங்கம் தென்னரசு

தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்படி, தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை இரண்டு முறை சிறிய அளவில் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் மூன்றாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் நடைபெறவிருக்கிறது. அதன்படி மன்னார்குடி எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவியும், பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியானது.

அமைச்சரவை மாற்றம் - டி.ஆர்.பி.ராஜா  - நாசர்
அமைச்சரவை மாற்றம் - டி.ஆர்.பி.ராஜா - நாசர்

மேலும், ஆடியோ விவகாரத்தில் சிக்கிய பி.ஆர்.டி பழனிவேல் தியாகராஜனின் நிதியமைச்சர் இலாக்கா மாற்றப்பட இருப்பதாகவும், அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல, தொழில்துறை டி.ஆர்.பி.ராஜாவுக்கு வழங்கப்பட்டு, ஏற்கனவே அத்துறைக்கு அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுக்கு நிதித்துறையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், அமைச்சர் மனோ தங்கராஜ்-க்கு பால்வளத்துறை மாற்றப்படவுள்ளதாகவும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தங்கம் தென்னரசு-வின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கப்படவுள்ளதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இலாக்கா மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் ராஜா அமைச்சராக பதவியேற்கும் நிகழ்வுக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,