Published:Updated:

``அமைச்சர் பதவிக்கு பதிலாக... ஐடி விங் பதவி”- தி.மு.க-வில் அதிரடி மாற்றம்?!

தி.மு.க-அண்ணா அறிவாலயம்
News
தி.மு.க-அண்ணா அறிவாலயம்

தி.மு.க-ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியிலோ, ஆட்சியிலோ பெரிய அளவில் எந்த மாற்றமும் நடக்காத நிலையில், விரைவில் கட்சிக்குள் சில மாற்றங்கள் நடக்கவிருக்கின்றனவாம்.

``தி.மு.க ஆட்சியைப் பிடித்த பிறகு கட்சியிலோ, ஆட்சியிலோ பெரிய அளவில் எந்த மாற்றமும் நடக்காத நிலையில், விரைவில் கட்சியில் சில மாற்றங்கள் நடக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்" என்கிறார்கள் கட்சியின் உள்விவரம் அறிந்த சிலர்.

டி.ஆர்.பி.ராஜா
டி.ஆர்.பி.ராஜா

தி.மு.க-வின் பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராகவும் இருக்கும் டி.ஆர்.பாலுவின் மகன், சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா. இவர் மன்னார்குடித் தொகுதியிலிருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றிருக்கிறார். தி.மு.க இந்த முறைஆட்சியைப் பிடித்தபோது, டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்காமல்போனதால் அவரின் ஆதரவாளர்கள் வருத்ததில் இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேநேரம் தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக 2017-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். தி.மு.க-வின் முக்கிய அணிகளில் ஒன்றாக தற்போது தகவல் தொழில்நுட்ப அணியும் இருக்கிறது. இந்நிலையில் தி.மு.க ஆட்சியமைத்த பிறகு, தமிழக நிதித்துறை அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். இதனால், தி.மு.க-வின் கட்சிப் பணிகளிலும், ஐ.டி.விங் பணிகளிலும் முழுமையாக அவரால் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. மற்றொருபுறம் தனது மகனுக்கு அமைச்சர் பதவி தராவிட்டால், கட்சியிலாவது நல்ல பொறுப்பை வழங்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு தரப்பு தலைமைக்குத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் டெல்லியில் நடந்த மாநில நிதி அமைச்சர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய பி.டி.ஆரிடம், கட்சித் தலைமை ஐடி விங் செயலாளர் பதவியில் தொடர்வது குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அமைச்சர் பதவியே தனக்குப் போதும், கட்சிப் பதவியை ராஜினாமா செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறாராம் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

உதயநிதி
உதயநிதி

இதைத் தொடர்ந்து அந்தப் பதவியில் யாரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடந்தபோது டி.ஆர்.பி.ராஜாவின் பெயரைச் சொல்லியிருக்கிறார் உதயநிதி. அதற்குக் கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினும் ஓ.கே சொல்லிவிட்டார். இதற்கான அறிவிப்பு பொங்கலுக்கு முன்பாகவே வந்துவிடும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர். அதேபோல், மேலும் சில அணிகளுக்கான பொறுப்பாளர்களையும் மாற்றவும் ஆலோசனை நடந்துவருகிறது என்கிறார்கள்.