Published:Updated:

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி! - அறிவித்தார் ராகுல் காந்தி

ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி! - அறிவித்தார் ராகுல் காந்தி

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
ராகுல் காந்தி - சரண்ஜித் சிங் சன்னி

இந்தியாவில் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிற நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சரண்ஜித் சிங் சன்னி
சரண்ஜித் சிங் சன்னி

இந்த ஐந்து மாநிலங்களில் பஞ்சாப்பில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. அதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அந்தக் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி இரண்டு தொகுதிகளில் களம்காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி.ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism