Published:Updated:

செங்கல்பட்டு: ரேஷன் கடையில் ஆய்வு நடத்திய ஆட்சியர் - அறையைத் திறக்காத ஊழியர்கள்! - என்ன நடந்தது?

ஆய்வு நடத்திய ஆட்சியர்

ரேஷன் கடையில் பூட்டிக்கிடந்த ஓர் அறையைப் பார்வையிட அங்கிருந்த ஊழியர்களிடம் ஆட்சியர் திறந்து காண்பிக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஊழியர்கள், அறையின் சாவி இல்லை என்று சொல்லித் தட்டிக்கழித்திருக்கின்றனர்.

செங்கல்பட்டு: ரேஷன் கடையில் ஆய்வு நடத்திய ஆட்சியர் - அறையைத் திறக்காத ஊழியர்கள்! - என்ன நடந்தது?

ரேஷன் கடையில் பூட்டிக்கிடந்த ஓர் அறையைப் பார்வையிட அங்கிருந்த ஊழியர்களிடம் ஆட்சியர் திறந்து காண்பிக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஊழியர்கள், அறையின் சாவி இல்லை என்று சொல்லித் தட்டிக்கழித்திருக்கின்றனர்.

Published:Updated:
ஆய்வு நடத்திய ஆட்சியர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவிலுள்ள மானாமதி பகுதியிலுள்ள பஜார் பகுதியில் ஒரு ரேஷன் கடை அமைந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடைக்குள் வந்த ஆட்சியர் பொருள்களின் இருப்பு விவரங்கள் குறித்து தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும், அந்தக் கடையிலிருந்த பொருள்களையும் சோதனை செய்து பார்த்தார்.

ஆய்வு நடத்திய ஆட்சியர்
ஆய்வு நடத்திய ஆட்சியர்

அப்போது, அந்த ரேஷன் கடையில் பூட்டிக்கிடந்த ஓர் அறையைப் பார்வையிட அங்கிருந்த ஊழியர்களிடம் ஆட்சியர் திறந்து காண்பிக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஊழியர்கள், அறையின் சாவி இல்லை என்று சொல்லித் தட்டிக்கழித்திருக்கின்றனர். அதையடுத்து, அங்கு வெகு நேரமாக காத்திருந்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் உடனடியாக அந்த அறையைத் திறந்து, அதன் நிலை குறித்து தகவல் தெரிவிக்குமாறு உத்தரப்பு பிறப்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஆட்சியர் சென்றதற்குப் பின்னால், அந்த அறை திறக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூட்டிக்கிடந்த ரேஷன் கடையின் அறை
பூட்டிக்கிடந்த ரேஷன் கடையின் அறை

திறந்து பார்த்தபோது, அந்த அறை முழுவதும் பழைய ஆவணங்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன. மேலும், அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் செல்லரித்துக் காணப்பட்டன, அறை முழுவதும் வௌவால்கள் இருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து, இந்த அறையின் நிலை குறித்த தகவலை வட்டாட்சியர் ராஜன், மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism