Published:Updated:

விசாரணைக் கைதிகள் மரணம்; காவல்துறையை கடுமையாகச் சாடிய சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை உயர்நீதி மன்றம்

விசாரணைக் கைதிகளை இரக்கமில்லாமல் தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

விசாரணைக் கைதிகள் மரணம்; காவல்துறையை கடுமையாகச் சாடிய சென்னை உயர் நீதிமன்றம்!

விசாரணைக் கைதிகளை இரக்கமில்லாமல் தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
சென்னை உயர்நீதி மன்றம்

காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் என காவல்துறையினருக்கு எதிராகப் புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 'காவல்துறை சீர்த்திருத்தச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. மேலும், காவல்துறையினருக்கு எதிராகப் புகார் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இதற்கு மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக என மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்த ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைக்கக் கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு கடந்த அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அவர்களே அதை எப்படி விசாரிப்பார்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, ``விசாரணைக் கைதிகளை இரக்கமில்லாமல் தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையைக் காட்டுகிறது. எந்த காரணத்திற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோ, அதற்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்டம் இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழுவை நியமிக்க அரசு அஞ்சுகிறதா? இந்த விவகாரத்தில் மாநில அரசே நல்ல முடிவெடுத்து முறையான புகார் ஆணையத்தை அமைக்கும் என நம்புகிறோம்'' என்றனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism