Published:Updated:

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, ரவிச்சந்திரன் மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, ரவிச்சந்திரன் மனுக்களைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை 2018, செப்டம்பர் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையொட்டி, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் தங்களை விடுவிக்க வேண்டுமென நளினி, ரவிச்சந்திரன் இருவரும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்

நளினி
நளினி

இந்த வழக்கானது தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், `` தங்களை விடுவிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி ரவிச்சந்திரன் தொடர்ந்த மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம். உச்ச நீதிமன்றத்தைப்போல சென்னை உயர் நீதிமன்றம் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களை விடுவிக்க உத்தரவிட முடியாது. இதனால் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்'' என தெரிவித்திருக்கின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளனை அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism