Published:Updated:

“வலிக்குது... என்னை விட்டுடுங்க சாமி...” - கோயிலுக்குள்ளேயே சிறுமியை சீரழித்த பூசாரி!

பூசாரி சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
பூசாரி சந்திரசேகர்

‘உன்னோட டிரெஸ்ஸை அவிழ்த்துட்டு நவகிரகத்தைச் சுற்று. அப்போதான் பூஜை பலனளிக்கும்’ என்று ஏமாற்றியிருக்கிறார் பூசாரி.

“வலிக்குது... என்னை விட்டுடுங்க சாமி...” - கோயிலுக்குள்ளேயே சிறுமியை சீரழித்த பூசாரி!

‘உன்னோட டிரெஸ்ஸை அவிழ்த்துட்டு நவகிரகத்தைச் சுற்று. அப்போதான் பூஜை பலனளிக்கும்’ என்று ஏமாற்றியிருக்கிறார் பூசாரி.

Published:Updated:
பூசாரி சந்திரசேகர்
பிரீமியம் ஸ்டோரி
பூசாரி சந்திரசேகர்

பரிகார பூஜை என்ற பெயரில், 12 வயது சிறுமியை கோயில் பூசாரியே சீரழித்த விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளாக, தங்கள் மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்தப் பூசாரி என்று சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் பூசாரி சந்திரசேகர்!

திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார்தான் இந்தப் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். புகார் குறித்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் பேசினோம்.

“சென்னை மதுரவாயல் பகுதியிலுள்ள அம்மன் கோயிலில் பூசாரியாக இருப்பவர் சந்திரசேகர். 55 வயதாகும் இவர், பரிகார பூஜை, மாந்திரீகம், தோஷம் கழிப்பது என்ற பெயரில் மக்களை ஏமாற்றிவந்தார். 2018-ல், அந்த அம்மன் கோயிலுக்கு தனது 12 வயது மகளுடன் சென்ற பெண் ஒருவர், சந்திரசேகரிடம் அருள்வாக்கு கேட்டிருக்கிறார். உடனே, கண்களை மூடி தியானம் செய்வதுபோல அமைதியாக இருந்த சந்திரசேகர், திடீரென ஆக்ரோஷமாக வேப்பிலையைக் கையில் பிடித்தபடி, ‘உன் மகளுக்கு யாரோ சூனியம்வெச்சுருக்காங்க. ஒரு மண்டலம் இங்கே அழைச்சுக்கிட்டு வா. நான் சரி பண்ணிடுறேன்’ என்றிருக்கிறார்.

பூசாரி சந்திரசேகர்
பூசாரி சந்திரசேகர்

அதை பயபக்தியாகக் கேட்டுக்கொண்ட சிறுமியின் தாயும், ஒரு மண்டலம் மகளைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே சிறுமி இயல்பாக இருந்ததால், ‘பிரச்னை உன் வீட்டுல இருக்கு. உன் வீட்டுல பரிகாரம் செய்யணும்’ என்று சிறுமியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சந்திரசேகர். அவர் சொன்னதையெல்லாம் சிறுமியின் பெற்றோரும் கேட்டு நடந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் சிறுமியின் குடும்பத்தினருக்கு சந்திரசேகர் குடும்ப நண்பராகிவிட்டார். சந்திரசேகர் மீதான நம்பிக்கையில் கோயிலுக்குச் சிறுமியைத் தனியாக அனுப்பிவைத்துள்ளனர்.

ஜனவரி, 2019-ல் கோயிலுக்கு வந்த சிறுமியிடம், கையில் வேப்பிலையைக் கொடுத்து நவகிரகத்தைச் சுற்றிவருமாறு கூறியிருக்கிறார் சந்திரசேகர். சிறிது நேரத்திலேயே, ‘உன்னோட டிரெஸ்ஸை அவிழ்த்துட்டு நவகிரகத்தைச் சுற்று. அப்போதான் பூஜை பலனளிக்கும்’ என்று ஏமாற்றியிருக்கிறார் பூசாரி. தயங்கிய சிறுமியிடம், ‘கோயில்லதான் கூட்டம் இல்லையே... நவகிரகத்தைச் சுத்தி திரை போட்டிருக்குல்ல. தைரியமா சுத்து, அப்பதான் தோஷம் நீங்கும்’ என்றிருக்கிறார். வேறு வழியில்லாமல் அந்தச் சிறுமியும் நிர்வாணமாக நவகிரகத்தைச் சுற்றியிருக்கிறார். சிறிது நேரத்தில் திரைக்குள் நுழைந்த சந்திரசேகர், அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் ‘இதை வெளியில் சொன்னால் நீ ஆணாகிவிடுவாய்’ என்று அந்தச் சிறுமியை சந்திரசேகர் மிரட்டியதால், தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தச் சிறுமியும் வெளியில் எங்கும் சொல்லவில்லை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, அந்தச் சிறுமி கோயிலுக்கு வரும்போதெல்லாம் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

“வலிக்குது... என்னை விட்டுடுங்க சாமி...” - கோயிலுக்குள்ளேயே சிறுமியை சீரழித்த பூசாரி!

‘வலிக்குது... என்னை விட்டுடுங்க’ என்று சிறுமி கதறி அழும்போதெல்லாம், ‘பேயோட ஏவல் இருக்குறதால அப்படித்தான் வலிக்கும். கொஞ்சம் பொறுத்துக்க... உனக்குள் இருக்கும் பேயை ஓட்டிடுறேன்’ என்று விடாமல் அந்தப் பிஞ்சைச் சீரழித்திருக்கிறார் பூசாரி. 2019 முதல், 2021 வரை தொடர்ந்த இந்தப் பாலியல் வன்கொடுமை கோயிலிலும், சந்திரசேகரின் வீட்டிலும் அரங்கேறியிருக்கிறது. சமீபத்தில், சிறுமிக்கும், அவர் வீட்டின் அருகில் குடியிருக்கும் ஓர் இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தகவல் பூசாரி சந்திரசேகருக்குத் தெரிந்ததும், ‘அந்தப் பையனோட உங்கள் மகளைப் பழகவிடாதீர்கள்’ என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ‘பூசாரி சொல்லி நல்லது எதுவும் நடந்ததில்லை. இந்த நிலையில், நம்ம பொண்ணைக் குத்தம் சொல்றதுக்கு இவர் யார்’ என சிறுமியின் பெற்றோர் பூசாரி சந்திரசேகர் நடவடிக்கைகளின் மீது சந்தேகம்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். இதையடுத்து, சிறுமியையும் கோயிலுக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டனர்.

சமீபத்தில், அம்மன் கோயிலுக்கு அருகே சிறுமியின் தந்தை நின்றிருந்தபோது, பூசாரி சந்திரசேகரால், தான் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக இரண்டு சிறுமிகள் பேசிக் கொண்டதைக் கேட்டிருக்கிறார். இதையடுத்து தன் மகளைத் தனியாக அழைத்து பூசாரி சந்திரசேகர் குறித்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான், இத்தனை ஆண்டுகளாக தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி அழுதிருக்கிறார் அந்தச் சிறுமி. ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர், ஆகஸ்ட் 8-ம் தேதி சந்திரசேகரைத் தாக்கியதோடு காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். இதையடுத்து அவரை 11-ம் தேதி போக்சோவில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றார் விரிவாக.

குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுவதும், கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் விழிப்புணர்வை ஊட்டுவதும் பெற்றோரின் கடமை. அதில், போலிச் சாமியார்கள் குறித்த எச்சரிக்கையும் அவசியம்!