Published:Updated:

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை... திமுக அரசின் நிலைப்பாடும் சர்ச்சையும்!

எட்டுவழிச் சாலைத் திட்டம்

கடந்த அதிமுக ஆட்சியில் பல தரப்பினரின் எதிர்ப்புக்கு ஆளான சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் திமுக அரசு என்ன முடிவை எடுக்கப்போகிறது?

சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை... திமுக அரசின் நிலைப்பாடும் சர்ச்சையும்!

கடந்த அதிமுக ஆட்சியில் பல தரப்பினரின் எதிர்ப்புக்கு ஆளான சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தில் திமுக அரசு என்ன முடிவை எடுக்கப்போகிறது?

Published:Updated:
எட்டுவழிச் சாலைத் திட்டம்

சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பையிலிருந்து சேலத்துக்கு 277 கி.மீ நீளத்துக்கு எட்டுவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை 2018-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிவித்தது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில், அப்போதைய அதிமுக அரசு ஆர்வம்காட்டியது. எட்டுவழிச் சாலைக்காக சுமார் 7,000 விவசாயிகளிடமிருந்து 6,978 ஏக்கர் நிலங்களை அதிமுக அரசு கையகப்படுத்தியது.

எட்டுவழிச் சாலை
எட்டுவழிச் சாலை

அதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் பாதிக்கப்படுவதாக, இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திட்டத்துக்குத் தடைவிதித்து 2019-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘எட்டுவழிச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தலாம்’ என்று உத்தரவிட்டது. மேலும், ‘திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட விதம் தவறானது என்பதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டும்’ என்று தனது உத்தரவில் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதன்படி, நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன.

எட்டு வழிச் சாலை
எட்டு வழிச் சாலை

எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்துவந்த தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வரும் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நினைத்தனர். இந்த நிலையில், ‘தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பணிகளுக்குத் தமிழக அரசு சரியான ஒத்துழைப்பைக் கொடுப்பதில்லை’ என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி திடீரென குற்றம்சாட்டினார். அதற்கு ஜனவரி 24-ம் தேதி பதில் கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், ``மத்திய அரசுக்குக் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார். அதையடுத்து, எட்டுவழிச் சாலை விவகாரத்தில் தமிழக அரசு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியிருப்பதாகவும், பீகார் மாநிலம் தன்பாத் ஐஐடி வல்லுநர் குழுவைவைத்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அடுத்தகட்டமாக, சமூக, பொருளாதாரத் தாக்கம் குறித்து அறிக்கை தயாரித்து அளிப்பதற்கு கேரள அரசின் கிட்கோ நிறுவனத்தை மத்திய அரசு அமர்த்தியிருப்பதாகவும் செய்தி வெளியானது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக அனுமதியை வழங்குமாறு தமிழக அரசிடம் கிட்கோ நிறுவனம் கோரியிருப்பதாகவும் செய்தி வெளியானது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இது குறித்து அப்போது தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேசியபோது, ‘‘இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இந்தத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் செயல்படுத்தும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாலும், இதில் தமிழக அரசின் ஒப்புதலும் தேவை என்பதால், இந்தத் திட்டம் குறித்து கொள்கை முடிவெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது” என்று கூறினார். மேலும், “இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப்போவதாக மத்திய அரசிடமிருந்து கடிதம் எதுவும் இதுவரை வரவில்லை” என்றார் எ.வ.வேலு.

திருவாரூர் - கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு என்ற இடத்தில் நடைபெற்றுவரும் சாலை விரிவாக்கப் பணிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மார்ச் 20-ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “மத்திய அரசுடன் இணக்கமான முறையில் தமிழக அரசு இருக்கிறது. மத்திய அரசு சொல்லக்கூடிய அனைத்துப் பணிகளையும் மாநில அரசு சிறப்பாகச் செய்துவருகிறது. எட்டுவழிச் சாலை பணிகளைத் தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எ.வ.வேலு
எ.வ.வேலு

அதன் அடிப்படையில் மத்திய அரசுதான் பணிகள் தொடங்குவது குறித்து முடிவுசெய்ய வேண்டும். இதில், கொள்கை முடிவை எடுக்கவேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. எட்டுவழிச் சாலை என்பது சாதாரண சாலை அமைப்பது போன்ற பணி கிடையாது. ஆகவே, இதில் தமிழக முதல்வர் கொள்கை முடிவை எடுப்பார்” என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

இதற்கிடையில், சென்னை - சேலம் எட்டுவழிச் சாலையை, ‘பயண நேரக் குறைப்புச் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்து தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்போகிறார்கள் என்று கிண்டல் செய்து, தி.மு.க-வை விமர்சிக்கும் சிலர் ட்விட்டரில் டிரெண்ட் செய்தார்கள். ஆனால், இது குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான கண்ணதாசனிடம் நாம் பேசியபோது, “மக்களுக்கு எதிரான எந்தத் திட்டமும் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்படாது. இது குறித்து தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். எனவே, சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பே கிடையாது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism