Published:Updated:

சென்னை: திமுக கவுன்சிலர் லஞ்சம் கேட்டதாக பரவிய வைரல் வீடியோ - இரு தரப்பின் விளக்கம் என்ன?

லஞ்சம் கேட்ட வைரல் வீடியோ

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் வீடு கட்ட லட்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு கவுன்சிலர் என்ன சொல்கிறார்?

சென்னை: திமுக கவுன்சிலர் லஞ்சம் கேட்டதாக பரவிய வைரல் வீடியோ - இரு தரப்பின் விளக்கம் என்ன?

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் வீடு கட்ட லட்சம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு கவுன்சிலர் என்ன சொல்கிறார்?

Published:Updated:
லஞ்சம் கேட்ட வைரல் வீடியோ

சென்னை மாநகராட்சியின் 34-வது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சர்மிளா காந்தி என்பவர் இருக்கிறார். சமீபத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வீடு கட்ட லஞ்சம் கேட்டதாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது. வெளியான வீடியோவில், கவுன்சிலர் அலுவலகத்தில் கவுன்சிலர் இருக்கையில் சர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி அமர்ந்திருக்கிறார்.

சர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி
சர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி

அலுவலகத்தில் மேலும் சில திமுக பிரமுகர்கள் அமர்ந்திருக்கிறார்கள். கவன்சிலர், அவர் கணவரின் அருகே உள்ள இருக்கையில் ஓரமாக அமர்ந்திருக்கிறார். கவுன்சிலர் அலுவலகத்தில், இவர்களுக்கு எதிர்முனையில் பவானி என்ற பெண் வீடியோ எடுத்துக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் காரசாரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளியான வீடியோவில், ``எங்க இடத்துல நாங்க வீடு கட்டுறோம். எங்கிருந்தோ இங்க வந்து ஊருக்காரங்களை இது பண்ணாதீங்க சார். மக்களுக்கு நல்லது பண்றதுக்கு தான் நீங்க வந்திருக்கீங்க. மேடம், அவரு கவுன்சிலர் இல்லை... நீங்க தான் கவுன்சிலர்” என்று சொல்லும்போது அங்கிருந்தவர்கள் ஏதோ சொல்ல. ``நீங்க பேசாதீங்க நாயத்தை பேசுறதுன்னா மட்டும் பேசுங்கள்” என்று பவானி கூறுகிறார். அப்போது பேசிய கவுன்சிலரின் கணவர், ``நான் இந்த ஊர்க்காரன் தான்” என்கிறார். அப்போது அங்கிருந்த ஒருவர் எழுந்து நின்று பேசினர்.

நலசங்கத்தின் கடிதம்
நலசங்கத்தின் கடிதம்

அப்போது பவானி, ``நீ யாரு அல்லக்கை நீ எல்லாம் பேசாதே. பணத்துக்கு ஆசைப்பட்டு நீ வர, நீ அல்லக்கை நீ எல்லாம் பேசாதே. என்ன பண்ணுவ லேடீசை என்ன பண்ணுவ. இரு வீடியோ எடுக்கிறேன். தைரியம் இருந்த இப்போ பேசு’’ என்று பவானி கத்துகிறார். மேலும், ``என்ன மிரட்டுரீங்களா? நான் சி.எம் வரைக்கும் போவேன். கவுன்சிலர்னா எதுக்கு நாலு பேருக்கு நல்லது பண்ணத் தான்”என்றார். அப்போது கவுன்சிலரின் கணவர் எழுந்து கையை தலைமேல் கும்பிட்டு, ``தயவு செய்து கெளம்புங்கமா" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக கவுன்சிலர் சர்மிளா காந்தியிடம் பேசினோம். ``நான்கு நாள்களுக்கு முன்னர் குமரன்நகர் குடியிருப்போர் பொதுநல சங்கத்தினருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அப்போது அந்த பகுதி மக்கள், அந்த பகுதியில் ஒருவர் சாலைக்கு வெளியே வந்து சுற்றுச் சுவர் காட்டுகிறார்கள். அதனைப் பேசி சரிசெய்து கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் அவர்களாகவே எங்கள் அலுவலகத்தில் வந்து பேசினார்கள். நான் சர்வேயரிடம் சொல்லி அந்த நிலம் உங்களுடையதா இல்லை மாநகராட்சியினுடையதா என்பதைப் பார்த்துவிடலாம் என்று கூறினேன்.

கவுன்சிலர் சர்மிளா காந்தி
கவுன்சிலர் சர்மிளா காந்தி

அடுத்த நாள் அவரும், அவரின் சகோதரியும் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். நிலம் அளவு செய்துவிட்டுப் பேசுவோம் என்று கூறினோம். ஆனால், பதிலுக்கு அவர் என்னென்னமோ பேசிக்கொண்டிருந்தார். இந்த பகுதியே இல்லை நீங்கள் என்று அவர் சொன்னபோது, அங்கிருந்த ஒருவர் எழுந்து நின்று பேசினார். அதற்குப் பவானியோ அவரை அல்லக்கை என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அந்த வீடியோவில் பணம் குறித்து ஏதாவது பவானி பேசியுள்ளார்களா? இல்லை நாங்கள் தான் பேசியுள்ளோமா? சாலையில் சுவர் கட்டியுள்ளீர்களா என்று கேட்டதற்கு இவர் இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். அவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தால் கண்டிப்பாக மாநகராட்சி அலுவலகர்களோடு கலந்தாலோசனை செய்து அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று விளக்கம் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு தொடர்பாகப் புகார் வழங்கியிருந்த குமரன்நகர் குடியிருப்போர் பொதுநல சங்கத்தின் தலைவர் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஏற்கனவே அந்த சாலை மிகவும் சிறியது. ஒரு வாகனம் வந்து திரும்புவதற்குக் கூட மிகவும் சிரமமாக இருக்கும். இந்த நிலைமையில், தெரு முனையில் வீட்டின் சுற்றுச் சுவரை மூன்று அடி சாலையில் வந்து கட்டியதாகக் கூறப்படுகிறது. அது சரியா, உண்மை என்ன என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அலுவலகத்தில் நல சங்கத்தின் சார்பில் புகார் வழங்கியிருக்கிறோம். இது தொடர்பாக இந்த வார்டு கவுன்சிலரிடமும் புகார் மனு கொடுத்திருக்கிறோம்" என்றார்.

பொதுநல சங்கத்தின் தலைவர்
பொதுநல சங்கத்தின் தலைவர்

மேலும், ``புகார் வழங்கியதை அடுத்து, அந்த பெண் என் வீட்டுக்கு வந்து என்னை அசிங்கமாகப் பேசினார். எனக்கு 60 வயது ஆகிறது என் வயது கூட ஒரு மரியாதை கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசினார். மாநகராட்சி அலுவலகத்திலும், கவுன்சிலர் அலுவலகத்திலும் சென்று பிரச்னை செய்துள்ளார். உண்மையில் அவர் இடத்தில் தான் சுற்றுச் சுவர் காட்டியிருக்கிறாரா இல்லையா என்பதைத் தான் ஆய்வு நடத்தி ஒரு முடிவு சொல்லக் கூறினோம். அதற்குள் அவர் எப்படி என் வீட்டுக்கு வந்து என்னை அசிங்கப்படுத்திச் சென்றுவிட்டார்" என்று பேசியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பவானியின் கணவர் பாபுவிடம் பேசினோம், ``அது எங்கள் பூர்விக இடம். பட்டாவின் படி சாலையிலிருந்து மூன்று அடி விட்டுத் தான் சுற்றுச் சுவர் கட்டியிருக்கிறோம். எங்களின் அனுமதியில்லாமல் அந்த பகுதியில் உள்ள சிலர் எங்கள் இடத்தை அளந்து பார்த்துள்ளார்கள். அதுகுறித்து அவர்களிடம் கேட்க சென்றபோது, எனது மனைவியைத் திட்டியுள்ளார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். எங்களின் இடத்தை அளவு செய்து பார்க்க அவர்கள் யார். அந்த வார்டு கவுன்சிலரின் கணவர் தான் அவர்களோடு சேர்ந்து எங்களின் இடத்தை அபகரிக்கத் திட்டமிடுகின்றார் என்று எண்ணுகிறேன்" என்று பேசினார்.

கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர்
கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர்

மேலும், ``முதல் நாள் மாநகராட்சி அலுவலகத்தில் சென்று பார்க்கும்போது அன்று கவுன்சிலர் இல்லை அவரின் கணவர் மட்டுமே இருந்தார். அவர் எங்களிடம் நிலம் சம்பந்தமான ஆவணகங்களைக் கேட்டார். அது உங்களுக்கு எதற்குச் சார், அளவெடுக்க வேண்டும் என்றால் அதிகாரிகளை அழைத்துவாருங்கள் அவர்களிடத்தில் காட்டிக்கொள்கிறோம் என்று கூறிவிட்டோம். அதற்குக் கல்லைப் பிடுங்கிப் போட்டுவிடுவேன். சுவரை உடைத்துவிடுவேன் என்று மிரட்டினார். எங்களைத் தொடர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதனைத் தொடர்ந்தே ஆவணங்களை அவரிடத்தில் கொடுத்தோம். அதனை அவர்கள் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டார்கள். இந்த பிரச்சனை நீடிக்கவே தான் நாங்கள் அங்கு நடப்பதை வீடியோ எடுத்தோம். நாங்கள் எந்த அத்துமீறலும் செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கவுள்ளோம்" என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism