Published:Updated:

சவுக்கால் அடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - பின்னணி என்ன?

சத்தீஷ்கர் முதலமைச்சர் ( ட்விட்டர் )

சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், சவுக்கால் அடி வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சவுக்கால் அடி வாங்கிய சத்தீஸ்கர் முதலமைச்சர்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - பின்னணி என்ன?

சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், சவுக்கால் அடி வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published:Updated:
சத்தீஷ்கர் முதலமைச்சர் ( ட்விட்டர் )

சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ஒரு கோயிலில் சவுக்கால் அடி வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் துர்க் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற `கவுரி-கவுரா’ பூஜையில் கலந்துகொண்டார். சத்தீஷ்கரில் ஆண்டுதோறும் இந்த பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் சவுக்கால் அடிக்கும் சடங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பூபேஷ் பாகல் பங்கேற்றிருந்த நிலையில், அவருக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டது. நபர் ஒருவர் சவுக்கை எடுத்து பூபேஷ் பாகலின் கையில் வேகமாக அடிக்கிறார்.

அவரும் அதை பொறுமையாக ஏற்றுக்கொள்கிறார். இந்த நிகழ்ச்சியின்போது, இசை கருவிகளும் பின்னணியில் இசைக்கப்பட்டன. இது தொடர்பான வீடியோவை, சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மாநிலம் செழிக்க வேண்டி ஒவ்வோர் ஆண்டும் இந்த பாரம்பர்ய சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.