Published:Updated:

``சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல!" - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

``இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் தவறு என்றால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்துக்குச் செல்லலாம்." - அமைச்சர் சேகர் பாபு

``சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல!" - அமைச்சர் சேகர் பாபு

``இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் தவறு என்றால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்துக்குச் செல்லலாம்." - அமைச்சர் சேகர் பாபு

Published:Updated:
அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆய்வு நடத்திவரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம், கோயிலின் கணக்குவழக்கு பற்றிய ஆவணங்களைத் தீட்சிதர்கள் தரமறுப்பதாக கூறப்பட்டுவருகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இந்து அறநிலையத்துறையோ, அதன் ஆணையரோ ஒரு சமயக் கோயிலின் கணக்குகளைக் கேட்க முடியாது என்றும், மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர் தெரிவித்திருந்தார்.

நடராஜர் கோயில்
நடராஜர் கோயில்

இந்த நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அரசுக்குச் சொந்தமான இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கிறது. தீட்சிதர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அதனைச் சந்திக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை கீழ்பாக்கத்திலுள்ள ஏகாம்பர நகர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் சேகர் பாபு
அமைச்சர் சேகர் பாபு

அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ``நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தீட்சிதர்களின் செயலாளருக்கு யாரும் தடையாக இல்லை. இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் தவறு என்றால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்துக்குச் செல்லலாம். தவறுகள் எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு. திரும்பத் திரும்ப நான் சொல்வது இதுதான், அது ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல. நம்மை ஆண்ட மன்னர்களால் ,முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

அந்த திருக்கோயில்களில் வரும் வருமானங்களை முறையாகக் கணக்கு கேட்கின்றபோது, கணக்குக் காட்டுவது தீட்சிதர்களின் கடமை. கோயிலின் உள்ளே மானாவாரியாக அவர்கள் இஷ்டத்துக்கு கட்டடங்களை எழுப்பியிருக்கின்றார்கள். இப்படி எழுப்பப்பட்ட கட்டடங்கள் குறித்து கேள்வி கேட்பது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை. இதற்கு முழுவதும் ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. அவர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அதற்கு உண்டான விளக்கத்தை நீதிமன்றத்தில் நாங்களும் எடுத்துச் செல்வதற்குத் தயாராக இருக்கின்றோம். இந்து சமய அறநிலையத்துறை பொறுத்தவரையில் எந்த விதமான அத்துமீறலும், அதிகார துஷ்பிரயோகமும் செய்யப்படவில்லை. மேலும் அந்த இடத்தை பொறுத்தவரையில் முழுக்க அரசினுடைய இடம்" என்று கூறினார்.