Published:Updated:

``தோல்வியை மூடி மறைப்பதற்குக் கோவையில் நாடகம் நடத்தியிருக்கிறார்கள்!" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

``வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

``தோல்வியை மூடி மறைப்பதற்குக் கோவையில் நாடகம் நடத்தியிருக்கிறார்கள்!" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

``வாக்காளர்கள் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published:Updated:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.காலை முதல் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் , பொதுமக்களும் தங்களது ஜனநாயக கடமையைச் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், ``நான் எனது ஜனநாயக கடமையைச் செய்திருக்கிறேன். மக்களும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் அரசுத் திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறது. எனவே மக்கள் கட்டாயம் தங்களின் வாக்குகளைச் செலுத்த வேண்டும்'' என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் கோவையில் நேற்று நடைபெற்ற போராட்டம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, `கோவையில் ராணுவத்தை வர வைக்க வேண்டிய அளவுக்கு எந்தவித சம்பவமும் நடைபெறவில்லை. அதிமுகவினர் தோல்வி பயத்தில் இது போல் பேசி வருகிறார்கள். அதிமுகவின் தோல்வியை மூடி மறைப்பதற்காக கோவையில் நாடகம் நடத்தியிருக்கிறார்கள். தமிழகத்தில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism