Published:Updated:

``நல்ல முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் ஆளுநருக்கு நன்றி..!" - பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

``உயர்கல்வியின் பொற்காலமாக எனது ஆட்சியின் காலம் இருக்கும்'' என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

``நல்ல முயற்சிக்கு ஆதரவாக இருக்கும் ஆளுநருக்கு நன்றி..!" - பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின்

``உயர்கல்வியின் பொற்காலமாக எனது ஆட்சியின் காலம் இருக்கும்'' என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ``நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது, கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே வசதியாக உள்ளது. 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும். ராஜகோபாலச்சாரி, சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, அப்துல்கலாம் உள்ளிட்ட 5 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். இந்தியாவின் தலைச்சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்'' என்றார்.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

அடுத்ததாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``வேலைகள் இருக்கின்றன... ஆனால், திறன் குறைவாக இருக்கிறது. இதனை சரி செய்யவே `நான் முதல்வன் திட்டம்' உருவாக்கப்பட்டது. மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. தமிழ்நாட்டில் நிதிப் பற்றாக்குறை பிரச்னை இருந்தாலும், மாணவர்களுக்காகப் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

பெருந்தலைவர் காமராஜர் காலம் பள்ளியின் பொற்காலம் என்பதைப்போல, முத்தமிழறிஞர் கலைஞரின் காலம் கல்லூரியின் பொற்காலம் என்பதைப்போல, என்னுடைய ஆட்சியின் காலம் உயர்கல்வியின் பொற்காலமாக ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நல்ல முயற்சிக்கு உதவியாக இருந்து கொண்டிருக்கிற தமிழக ஆளுநருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism