Published:Updated:

ரூ.70.57 கோடியில் விருதுநகருக்கு புதிய ஆட்சியர் அலுவலகம்! - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

ரூ.70.57 கோடியில் விருதுநகருக்கு புதிய ஆட்சியர் அலுவலகம்! - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

Published:Updated:
அடிக்கல் நாட்டு விழா

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அலுவலக கோப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த துறை சேவைகள் ஆகியவற்றுக்கு போதிய இடவசதியில்லாமல் இருந்துவந்தது. எனவே தற்போது பயன்பாட்டிலுள்ள விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள பகுதியில் புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசிடம் விருப்பம் தெரிவிக்கப்பட்டதன் பேரில், அரசு விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு 70.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். விருதுநகரில் புதிதாக அமையவிருக்கும் மாவட்ட ஆட்சியர் வளாகம் 6 தளங்களைக் கொண்ட அலுவலகமாகவும், விசாலமான கார் பார்க்கிங் வசதி மற்றும் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடனும் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

திட்டப்பணி தொடக்கம்
திட்டப்பணி தொடக்கம்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பணிநியமன ஆணை
பணிநியமன ஆணை

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‌' நிகழ்ச்சியில் மனவளர்ச்சிக்குன்றிய மகனோடு பங்குபெற்று வாழ்வாரத்துக்காக உதவிக்கேட்டு கோரிக்கை விடுத்திருந்த பாண்டிதேவி என்ற பெண்னுக்கு, அங்கன்வாடி ஊழியர் பணிநியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி உத்தரவிட்டார். அதை முதல்வரின் கால்களை தொட்டு வணங்கி பாண்டிதேவி பெற்றுக்கொண்டார். இதையடுத்து, நிகழ்ச்சியில் எதுவும் பேசாமலேயே முதல்வர்‌ மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.