Published:Updated:

`காவலர் - பொதுமக்களுக்கிடையே உறவை மேம்படுத்த புதிய காவல் ஆணையம்!’ - முதல்வர் ஸ்டாலின்

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல்துறையினருக்கும் , மக்களுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்தவும் புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர்  அறிக்கை
முதலமைச்சர் அறிக்கை

புதிய காவல் ஆணையத்தின் உறுப்பினர்களாக அலாவுதீன், ராதாகிருஷ்ணன், மருத்துவர் ராமசுப்பிரமணியம், பேராசிரியர் நளினி ராவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆணையர் உறுப்பினர் செயலராக காவல்துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வாலை நியமனம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

`காவலர் - பொதுமக்களுக்கிடையே உறவை மேம்படுத்த புதிய காவல் ஆணையம்!’ - முதல்வர் ஸ்டாலின்

இந்த ஆணையம் காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும். காவல்துறையின் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழிக் குற்றங்களைத் தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும், இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் அமைந்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.