Published:Updated:

எழுவர் விடுதலை: `உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்!'- ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள், முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து வலியுறுத்திவருகின்றனர். நேற்றைய தினம் பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக விடுப்பு வழங்க வேண்டும் என அவருடைய தாய் அற்புதம்மாள் கோரிக்கைவைத்திருந்தார். அதைக் கருத்தில்கொண்டு, விதிகளைத் தளர்த்தி 30 நாள் விடுப்பு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தை ஜனாதிபதி அலுவலகத்தில் திமுக-வின் பொருளாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் நேரில் வழங்கினார். ஏழு பேரும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்
முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளிலுள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து, ஏழு பேர் விடுதலை பற்றி தமிழக அமைச்சரவை 9-9-2018-ல் நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் .

அடுத்த கட்டுரைக்கு