Published:Updated:

``சாப்பிட என்ன இருக்கு... தண்ணீர் மட்டும் கொடுங்க” - முதல்வர் ஸ்டாலினின் தேனி விசிட் ஹைலைட்ஸ்

முதல்வர் ஸ்டாலின்

தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் 114.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 40 பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

``சாப்பிட என்ன இருக்கு... தண்ணீர் மட்டும் கொடுங்க” - முதல்வர் ஸ்டாலினின் தேனி விசிட் ஹைலைட்ஸ்

தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் 114.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 40 பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தேனி மாவட்டத்தில் அரசின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மாலை மதுரை விமான நிலையம் வந்தார். இதையடுத்து தரைமார்க்கமாக கார் மூலம் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக வைகை அணை விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.

முதல்வர்
முதல்வர்

தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் திமுகவினர் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ஆண்டிபட்டி நகருக்குள் வந்தபோது முதல்வர் திடீரென போலீஸார் குடியிருப்பு பகுதிக்கு சென்றார். அப்பகுதி மக்கள் முதல்வர் வருகையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது முதல்வர் அவர்களிடம், குறைகள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டறிந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவலர் குடியிருப்பில் முதல்வர்
காவலர் குடியிருப்பில் முதல்வர்

அப்பகுதி பெண் ஒருவர் அவர் வீட்டிற்கு முதல்வரை சாப்பிட அழைத்தார். அதற்கு முதல்வர், ``என்ன சாப்பாடு உள்ளது?” எனக் கேட்க, அந்தப் பெண்ணோ, `தோசை ’எனக் கூறினார். ``நீங்க வீட்டுக்கு அளவா தான் சமைக்க ரெடி பண்ணீருப்பீங்க. கொஞ்ச தண்ணீ மட்டும் கொடுங்க போதும்” எனக் கூறி தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு கிளம்பினார். அப்போது அந்தக் குடியிருப்பு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டதற்கான கல்வெட்டை பார்த்துவிட்டு புறப்பட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேனியில் நடைபெற்ற அரசு விழாவில் 114.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 40 பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதிமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீரபாண்டியில் அரசு சட்டக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். கல்லூரி கட்டடப்பணிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது திறப்புவிழா கண்டுள்ளது. 114 கோடியில் 89 கோடி ரூபாய் சட்டக்கல்லூரிக்கானது மீதம் 25 கோடி மட்டுமே ஊராட்சி மன்ற அலுவலங்கள், அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள் என பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் பலவும் அதிமுக ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்ட பணிகள் தான்.

நியாயவிலைக்கடையில் ஆய்வு
நியாயவிலைக்கடையில் ஆய்வு

இதனால் தேனி வருகை தந்த முதல்வரின் நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை. மேலும் தொடங்க உள்ள புதிய திட்டங்களை மட்டுமே குறிப்பிட்டு திமுகவினர் விளம்பர பேனர்களும், நாளிதழ் விளம்பரங்களும் கொடுத்திருந்தனர். நிகழ்ச்சி மேடையிலும் கூட சட்டக்கல்லூரி உள்ளிட்ட புதிய கட்டடங்கள் திறப்புக் குறித்து யாரும் பெரிதாக பேசவில்லை.

ஒபிஎஸ் மகனும் தேனி எம்பியும் ரவிந்திரநாத்குமாருக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் முதல் வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. ரவீந்திரநாத்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பதால் அந்த இருக்கை அங்கிருந்து அகற்றப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக, ஆண்டிபட்டி அருகே உள்ள அரப்படிதேவன்பட்டியில் உள்ள நியாயவிலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தக் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளின் இருப்புக் குறித்து கேட்டறிந்தார். மேலும் கடைக்கு பொருள்கள் வாங்க வரிசையில் நின்றிருந்த பெண்களிடம் ரேசன் பொருட்களின் தரம் குறித்து விசாரித்தார்.

முதல்வர் ஆய்வு
முதல்வர் ஆய்வு

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ``முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க தீர்மானம் போடப்பட்டபோது தமிழகத்தில் உள்ள கட்சியினரும் ஆதரித்தபோது ஒரு கட்சியினர் மட்டும் எதிர்த்தனர். எம்ஜிஆர் அவர்களிடம் கருணாநிதி குறித்து தவறாக குறித்து பேசியவரை தனது காரில் இறக்கிவிட்டுச் சென்றவர் எம்ஜிஆர். அவரிடம் இருந்த அரசியல் நாகரீகத்தை தற்போது உள்ளவர்களிடம் எதிர்பார்ப்பது என் தவறுதான்” என வருத்தம் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் அமருவதற்காக நிகழ்ச்சி அரங்கில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் பகுதியில் அவர்களை அமர போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் நிகழ்ச்சியை புறகணித்துவிட்டு செல்வாக வெளியேறினர். அவர்களிடம் மாவட்ட கலெக்டர் முரளீதரன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்தனர்.

காய்கறிகளை அள்ளிச்சென்ற மக்கள்
காய்கறிகளை அள்ளிச்சென்ற மக்கள்

நிகழ்ச்சி அரங்கின் நுழைவுவாயில் பகுதியில் காய்கறியால் தோரணம் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடியும் வரை காய்கறிகள யாரும் எடுத்துவிடாமல் இருக்க இரண்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் அரங்கை விட்டு வெளியே வந்த மக்கள் தோரண வாயிலில் கட்டப்பட்டிருந்த வாழை, பப்பாளி, முருங்கை உள்ளிட்ட காய் மற்றும் கனிகளை பறித்தும், அள்ளியும் சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism