Published:Updated:

சச்சின் - கேலாட் மோதல்... ‘கை’ கூடுமா ராஜஸ்தான்?

ராஜஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ராஜஸ்தான்

டெல்லி பாலா

சச்சின் - கேலாட் மோதல்... ‘கை’ கூடுமா ராஜஸ்தான்?

டெல்லி பாலா

Published:Updated:
ராஜஸ்தான்
பிரீமியம் ஸ்டோரி
ராஜஸ்தான்
கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தைத் தொடர்ந்து, அரும்பாடுபட்டு ஆட்சியைப் பிடித்த ராஜஸ்தான் மாநிலமும் கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் தவிக்கிறது காங்கிரஸ் கட்சி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தங்கள் ‘கை’ சின்னத்தில் விரலுக்கு ஒரு மாநிலத்தில் ஆட்சி என்று சொல்லும் அளவுக்குக்கூட காங்கிரஸ் இல்லை. ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன. `இவற்றில் பெரிய மாநிலமான ராஜஸ்தான் கையைவிட்டுப் போனால் பெரும் பாதிப்பு’ என்று காங்கிரஸ் கருதுகிறது. எனவேதான், போர்க்கொடி தூக்கியிருக்கும் சச்சின் பைலட்டை மாநில கட்சித் தலைவர் மற்றும் துணை முதல்வர் பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கியிருப்பதாகச் சில டெல்லி தலைவர்கள் கூறுகிறார்கள்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

ராஜஸ்தான் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டின் நடவடிக்கைகள் பிடிக்காததால், தன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ-க்களுடன் இணைந்து போர்க்கொடி தூக்கினார். இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை உருவானது. இதையடுத்து நடத்தப்பட்ட கட்சிக் கூட்டங்களில் கொறடா உத்தரவிட்டும், சச்சின் பைலட்டும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் பங்கேற்கவில்லை.

முதற்கட்டமாக ராகுல் காந்தி தரப்பில் சச்சினிடம் பேசப்பட்டது. பிறகு, பிரியங்கா காந்தியும் பேசியிருக்கிறார். ஆனாலும், ‘முதலமைச்சரை மாற்ற வேண்டும்’ என்பதில் சச்சின் விடாப்பிடியாக இருக்கிறாராம். ஆட்சியைத் தக்கவைப்பது முக்கியம் என்பதால், உடனடியாக சச்சின் உட்பட 19 எம்.எல்.ஏ-க்களுக்கு தகுதிநீக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றையை நிலையில் ஆட்சிக்குப் பெரும்பான்மை இருந்தாலும்கூட, வரும் நாள்களில் பா.ஜ.க எத்தகைய காய்களை நகர்த்துமோ என்கிற அச்சமும் காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது. காங்கிரஸிலிருந்து வெளியேறி மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைக் கலைத்த ஜோதிராதித்ய சிந்தியாவை உடனடியாக பா.ஜ.க-வுக்கு அழைத்ததுபோல அவசரம் காட்டாமல், சச்சின் விஷயத்தில் பா.ஜ.க அமைதி காப்பதாக காங்கிரஸ் கருதுகிறது.

பா.ஜ.க முன்னாள் முதல்வர் வசுந்தரா ரஜே சிந்தியாவும் அமைதியாகவே உள்ளார் என்பதையும் காங்கிரஸ் கவனிக்கத் தவறவில்லை. ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ள டெல்லி காங்கிரஸ் தலைவர்களான கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, அஜய் மேகன் ஆகியோர் இவற்றையெல்லாம் தீவிரமாக அலசிவருகின்றனர்.

இதற்கிடையே, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின், ‘நான் பா.ஜ.க-வில் சேரப்போவதில்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். இதுவும் காங்கிரஸ் கட்சியைக் குழப்பமடைய வைத்துள்ளது. ஆனாலும், இந்த அறிவிப்புக்குப் பிறகு அவரை விமர்சிப்பதைக் கட்சித் தலைவர்கள் பெருமளவுக்குக் குறைத்துக் கொண்டுள்ளனர்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

சச்சினைச் சரிக்கட்ட தொடர்ந்து பேசிவரும் மூத்த தலைவர் அகமது பாட்டீலிடமும், ‘‘நான் பா.ஜ.க-வுக்குப் போக மாட்டேன். என் பிரச்னைகளை யாரும் கேட்கவில்லை’ என்று மட்டும் சச்சின் தொடர்ந்து கூறிவருகிறாராம். ஆனால், பிரச்னைகளை வெளிப்படையாகப் பேச சச்சின் முன்வராததையும் சந்தேகக் கண்ணோடுதான் காங்கிரஸ் பார்க்கிறது.

‘சச்சின் இறங்கி வந்தால், அவருக்கு கட்சியில் தேசியப் பொறுப்பு ஏதேனும் வழங்கி டெல்லியில் வைத்துக்கொள்ளலாம். ஏதேனும் ஒரு மாநிலத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி-யாக ஆக்கலாம்’ என்று ஆலோசிக்கப்பட்டு, ராகுல்காந்தி தரப்பில் தூது அனுப்பப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism