Published:Updated:

``குழந்தை திருமணம், குடும்ப வன்முறையிலிருந்து மீண்டு வந்தவர்!" - திரௌபதி முர்மு குறித்து பாஜக எம்.பி

திரௌபதி முர்மு

"திரௌபதி முர்மு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மகிழ்ச்சியடைந்துள்ளது." - பா.ஜ.க எம்.பி பி.சி.மோகன்

``குழந்தை திருமணம், குடும்ப வன்முறையிலிருந்து மீண்டு வந்தவர்!" - திரௌபதி முர்மு குறித்து பாஜக எம்.பி

"திரௌபதி முர்மு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மகிழ்ச்சியடைந்துள்ளது." - பா.ஜ.க எம்.பி பி.சி.மோகன்

Published:Updated:
திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பலர் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி மோகன், ``15 வயதில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டவர் திரௌபதி முர்மு. குடும்ப வன்முறையிலிருந்து தப்பியவர் அவர். திரௌபதி முர்மு ஜி-யின் துன்பங்களை எதிர்கொள்ளும் தைரியம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவர் புதிய இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகிறார். அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மகிழ்ச்சியடைந்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

1958 -ல் பிறந்த திரௌபதி முர்மு (64), இந்தியாவின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒடிசாவிலிருந்து பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவராவார். ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றிய பழங்குடி சமூகத்தின் முதல் உறுப்பினர் இவர். ​​ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) பி.ஜே.பி ஆதரவுடன் ஆட்சி அமைத்தபோது, அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.