Published:Updated:

``மோடி அரசின் சிவப்புக் கண்களைச் சீனக் கண்ணாடிகள் மறைக்கின்றன!" - மல்லிகார்ஜுன கார்கே சாடல்

மல்லிகார்ஜுன கார்கே ( ட்விட்டர் )

இந்தியா-சீனா விவாகரத்தில், ``மோடி அரசின் `சிவப்புக் கண்கள்' சீனக் கண்ணாடிகளால் மூடப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருக்கிறார்.

``மோடி அரசின் சிவப்புக் கண்களைச் சீனக் கண்ணாடிகள் மறைக்கின்றன!" - மல்லிகார்ஜுன கார்கே சாடல்

இந்தியா-சீனா விவாகரத்தில், ``மோடி அரசின் `சிவப்புக் கண்கள்' சீனக் கண்ணாடிகளால் மூடப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது" என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்திருக்கிறார்.

Published:Updated:
மல்லிகார்ஜுன கார்கே ( ட்விட்டர் )

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே டிசம்பர் 9-ம் தேதி நடந்த மோதல் நாடாளுமன்றத்தில் பெரும் பேசுபொருளானது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி-யுமான மல்லிகார்ஜுன கார்கே கூறியதையடுத்து, ``சீன ராணுவத்தின் ஊடுருவலை இந்திய ராணுவத்தினர் முறியடித்துவிட்டனர்" என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்திருந்தார்.

இந்தியா சீனா
இந்தியா சீனா

இருப்பினும், இந்தியா-சீனா மோதல் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி கடந்த இரண்டு நாள்களாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதற்கிடையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``சீனாவுடனான வர்த்தகத்தை ஏன் நாம் நிறுத்தக் கூடாது, சீனாவுக்கு இதுவொரு பாடமாக இருக்கும்" எனக் கூறியிருந்தார்.

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே
ட்விட்டர்

இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா-சீனா விவகாரத்தில் மத்திய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தன் ட்விட்டர் பக்கத்தில், ``மோடி அரசின் `சிவப்புக் கண்கள்' சீனக் கண்ணாடிகளால் மூடப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. இந்திய நாடாளுமன்றத்தில் சீனாவுக்கு எதிராகப் பேச அனுமதி இல்லையா..?" என இந்தியில் பதிவிட்டிருக்கிறார்.