Published:Updated:

சேலம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் கோஷ்டிப் பூசல்; திமுக-வினரிடையே வெடித்த மோதல்!

திமுக-வினரிடையே வெடித்த மோதல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில், திமுக-வினரிடையே வெடித்த கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் கோஷ்டிப் பூசல்; திமுக-வினரிடையே வெடித்த மோதல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில், திமுக-வினரிடையே வெடித்த கோஷ்டி மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
திமுக-வினரிடையே வெடித்த மோதல்!

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்திருக்கிறார். காலை முதலே பெரும்பாலான நியாய விலைக்கடைகளில் சர்வர் பிரச்னை நிலவி வருகிறது. அதனால், நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்குள் வாக்குவாதமும், தகராறுகளும் சில இடங்களில் நடந்துவருகின்றன.

இந்த நிலையில், சேலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் தி.மு.க-வினரிடையே கோஷ்டிப் பூசல் காரணமாக, மோதல் வெடித்த சம்பவம் சற்றே பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம், வீரக்கல் புதூர், ராம நகர்ப் பகுதியிலிருக்கும் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைப்பதற்காக, அந்தப் பகுதியின் பேரூராட்சித் தலைவர் தெய்வானை தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்றிருக்கிறார்.

கைகலப்பு
கைகலப்பு

அப்போது, நங்கவள்ளி தி.மு.க ஒன்றியச் செயலாளர் சின்னு என்கிற அர்த்தநாரீஸ்வரர் மற்றும் அவர் ஆதரவாளர்கள் பேரூராட்சித் தலைவரான தெய்வானையிடம், ``ஒன்றியச் செயலாளர்தான் முதலில் பரிசுப் பொருள்களைக் கொடுக்க வேண்டும்" என்று தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதையடுத்து, நங்கவள்ளி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிவசிதம்பரம், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் அவர் ஆதரவாளர்களுடன் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இருதரப்பினரிடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாற, அர்த்தநாரீஸ்வரரின் ஆதரவாளர்கள் தாக்கியதில், சிவசிதம்பரம் காயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பரபரப்பு ஏற்பட, நீண்ட நேரமாக பொதுமக்கள் வரிசையில் காத்திருப்பதைக் கண்ட அதிகாரிகள்... அதே பகுதியிலுள்ள மற்றொரு சிறப்பு அங்காடியில் ஒருவரும், ராம் நகர்ப் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடியில் ஒருவரும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை கொடுப்பதற்கு வழிவகை செய்தனர்.