Published:Updated:

`வைகோ vs வெங்கைய நாயுடு!' பரபரத்த மாநிலங்களவை - நடந்தது என்ன..?

வைக்கோ vs வெங்கைய நாயுடு

தன் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய வெங்கைய நாயுடுவிடம் சிறிது நேரம் வாதிட்ட வைகோ, பின்னர் அவைத் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதால் அமைதியானார்.

`வைகோ vs வெங்கைய நாயுடு!' பரபரத்த மாநிலங்களவை - நடந்தது என்ன..?

தன் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய வெங்கைய நாயுடுவிடம் சிறிது நேரம் வாதிட்ட வைகோ, பின்னர் அவைத் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதால் அமைதியானார்.

Published:Updated:
வைக்கோ vs வெங்கைய நாயுடு

மாநிலங்களவையில் உரையாற்றிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மேடைப் பேச்சில், பேசுவதைப்போல மாநிலங்களவையில் குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசத்தொடங்கினார். அதை எதிர்த்து மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கைய நாயுடு நடுவில் குறுக்கிட்டுப் பேசியதால், இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தன் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய வெங்கைய நாயுடுவிடம் சிறிது நேரம் வாதிட்ட வைகோ, பின்னர் அவைத் தலைவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதால் அமைதியானார்.

மாநிலங்களவையில் பேசிய வைகோ, ``தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரும் கடிதங்கள் அனைத்தும் இந்தியில் தான் கிடைக்கப்பெறுகின்றன. இந்தியைத் தவிர்த்துப் பிற மொழிகளைப் பேசும் மாநிலங்களின் மீது மத்திய அரசு தங்களின் அதிகாரப்போக்கை செலுத்தும் விதமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களும், கொள்கைகளும், பிற செயல்பாடுகளும் எங்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. மத்திய அரசின் புதிய திட்டங்களும், அதற்காக ஒதுக்கப்படும் நிதி, செலவினங்களை எங்களால் அறிந்துகொள்ள முடியவில்லை.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

ஆங்கிலத்தின் போக்கை எங்களின் பின் தள்ள முடியாது. அனைத்து மாநிலங்களின் மொழிகளையும் மத்திய அரசின் நிர்வாக நடைமுறையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்துவருகிறது. எனவே, அதற்கு தாங்கள் செவிசாய்த்து நடைமுறைப்படுத்த வேண்டும்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வைகோ, தன் குறிப்புகளைப் பார்த்துத் தொடர்ந்து பேச முயன்ற போது, இடையில் குறுக்கிட்ட துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, ``நீங்கள் கூற வந்த செய்தியைக் கூறி விட்டீர்கள். அது அனைவருக்கும் புரிந்துவிட்டது. நீங்கள் பேசுவதற்குப் பதிலாக விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். நாடாளுமன்ற விதிப்படி இது பொருந்தாத விஷயம். நீங்கள் பேசாமல் குறிப்புகளை வாசிப்பதால் அது சபைக்குறிப்பில் ஏற்றுக்கொள்ளப்படாது. இதையும் உங்கள் வசதிக்காக ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறேன்" என்று கூறினார்.

வைகோ
வைகோ

அதைக் கேட்டுக் கொதிப்படைந்த வைகோ குறிப்புகள் ஏதுமின்றி பேசத்தொடங்கினார். அப்போது, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும், அவர் தொடர்ந்து பேச முயன்றார். அப்போது மீண்டும் இடையில் குறுக்கிட்ட வெங்கைய நாயுடு, ``இந்திய மொழிகளில் எந்த ஒரு மொழியையும் திணிக்கக் கூடாது. ஒவ்வொரு மொழிகளையும் நாம் ஊக்குவிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு, அடுத்த நாடாளுமன்ற உறுப்பினரைப் பேச வருமாறு அழைத்தார்.

இதை எதிர்த்த வைகோ, ``என்னைப் பேச அனுமதிக்க வேண்டும். என் வாய்ப்பை யாரும் தடுக்க வேண்டாம்!" என்றார். அதற்கு வெங்கைய நாயுடு, ``நீங்கள் நாடாளுமன்றத்தில் ஓர் மூத்த உறுப்பினர். எனவே, இந்த சபைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று கூறிவிட்டு, வாய்ப்பளிக்க மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து வைகோவும் அமைதியானார்.

இருவரிடையேயான வாரத்தை மோதலால், அவையில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism