Published:Updated:

``பாஜக சட்டப்பேரவையை மாசுபடுத்தியிருக்கிறது" - கோமியம்கொண்டு சுத்தம் செய்த காங்கிரஸார்

சட்டப்பேரவையில் கோமியம்கொண்டு பூஜை.

காங்கிரஸார் தாங்கள் சொன்னதைப்போலவே, சட்டப்பேரவையைக் கோமியம்கொண்டு சுத்தம் செய்ததுடன், பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துவருவது, அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

Published:Updated:

``பாஜக சட்டப்பேரவையை மாசுபடுத்தியிருக்கிறது" - கோமியம்கொண்டு சுத்தம் செய்த காங்கிரஸார்

காங்கிரஸார் தாங்கள் சொன்னதைப்போலவே, சட்டப்பேரவையைக் கோமியம்கொண்டு சுத்தம் செய்ததுடன், பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துவருவது, அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

சட்டப்பேரவையில் கோமியம்கொண்டு பூஜை.

கர்நாடகா மாநிலம், பெங்களூர் விதான் சவுதா சட்டப்பேரவை வளாகத்தை, காங்கிரஸ் கட்சியினர் கோமியம் தெளித்து, பூஜை செய்து, பா.ஜ.கவைக் கலாய்த்திருக்கின்றனர்.

தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த, 10-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 135 தொகுதிகளில் மாபெரும் வெற்றிபெற்று, காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் மற்றும் எட்டு கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

சட்டப்பேரவையில் கோமியம்கொண்டு பூஜை.
சட்டப்பேரவையில் கோமியம்கொண்டு பூஜை.

இப்படியான நிலையில், இன்று காலை, காங்கிரஸ் கட்சியினர், பெங்களூரிலுள்ள விதான் சவுதா சட்டப்பேரவை வளாகத்தில், கோமியம் தெளித்து, சிறப்பு பூஜை செய்திருக்கின்றனர். மேலும், இது குறித்து நிருபர்களிடம், ‘‘பா.ஜ.க., கர்நாடகா சட்டப்பேரவையைப் பல ஆண்டுகளாக மாசுபடுத்தியிருக்கிறது. ஆட்சிக்கு வந்திருக்கும் நாங்கள், கோமியம்கொண்டு சட்டசபையைச் சுத்தம் செய்திருக்கிறோம்’’ என பா.ஜ.க-வைக் கலாய்த்து பேட்டியும் கொடுத்திருக்கின்றனர்.

கடந்த ஜனவரி 24-ம் தேதி கர்நாடகத்தில் பேசிய, தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ‘‘கர்நாடகத்தில், 40 சதவிகித ஊழலின் பிராண்டுதான் பா.ஜ.க. இன்னும் சில நாள்களுக்குள் அவர்கள் தங்கள் கூடாரத்தைக் காலிசெய்வார்கள்.

காங்கிரஸ் துணை முதல்வர்டி.கே.சிவக்குமார்.
காங்கிரஸ் துணை முதல்வர்டி.கே.சிவக்குமார்.

அவர்களின் மோசமான ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கின்றனர். ஊழல் ஆட்சிசெய்து பா.ஜ.க-வினர் சட்டப்பேரவையை மாசுபடுத்தியிருக்கின்றனர். அதை நாங்கள் கோமியம்கொண்டு சுத்தம் செய்வோம்’’ எனப்பேசியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸார் தாங்கள் சொன்னதைப்போலவே, சட்டப்பேரவையை கோமியம்கொண்டு சுத்தம் செய்ததுடன், பா.ஜ.க-வைக் கடுமையாக விமர்சித்துவருவது, அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.