Published:Updated:

``தெலங்கானாவில் மேகவெடிப்பு; வெளிநாட்டுச் சதிதான் காரணம் என சந்தேகம்!'' - முதல்வர் சந்திரசேகர் ராவ்

சந்திரசேகர் ராவ் ( ட்விட்டர் )

``மாநிலத்தில் `மேகவெடிப்பு' ஆங்காங்கே ஏற்பட்டுவருகிறது. `மேகவெடிப்பு சதிச் செயலாக இருக்கலாம்' என மக்கள் பேசிவருகின்றனர்." - முதல்வர் சந்திரசேகர் ராவ்

``தெலங்கானாவில் மேகவெடிப்பு; வெளிநாட்டுச் சதிதான் காரணம் என சந்தேகம்!'' - முதல்வர் சந்திரசேகர் ராவ்

``மாநிலத்தில் `மேகவெடிப்பு' ஆங்காங்கே ஏற்பட்டுவருகிறது. `மேகவெடிப்பு சதிச் செயலாக இருக்கலாம்' என மக்கள் பேசிவருகின்றனர்." - முதல்வர் சந்திரசேகர் ராவ்

Published:Updated:
சந்திரசேகர் ராவ் ( ட்விட்டர் )

தெலங்கானாவில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக மக்களின் இயல்புநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக தெலங்கானாவின் `கோயில் நகரம்' என்று அழைக்கப்படும் `பத்ராசலம்' பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மாநிலத்தில் `மேகவெடிப்பு' ஆங்காங்கே ஏற்பட்டுவருகிறது. `மேகவெடிப்பு சதிச் செயலாக இருக்கலாம்' என மக்கள் பேசிவருகின்றனர். வெளிநாட்டவர்கள் வேண்டுமென்றே மேகவெடிப்பைக் குறிப்பிட்ட சில இடங்களில் நிகழச் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. கடந்த சில தினங்களில் காஷ்மீர் அருகே, லடாக் லே-வில் இது போன்ற மேகவெடிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு உத்தரகாண்ட்டிலும் ஏற்பட்டது. தற்போது கோதாவரிப் பகுதியில் அவர்கள் அதைச் செய்வதாகச் சில செய்திகள் வருகின்றன'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!