Published:Updated:

கெஜ்ரிவால் பாணியில் பகவந்த் மான்; பஞ்சாப்பில், `வீடு தேடி ரேஷன்' திட்டம் அறிமுகம்!

பக்வந்த் மான்

பஞ்சாப்பில் பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவிருப்பதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருக்கிறார்.

கெஜ்ரிவால் பாணியில் பகவந்த் மான்; பஞ்சாப்பில், `வீடு தேடி ரேஷன்' திட்டம் அறிமுகம்!

பஞ்சாப்பில் பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவிருப்பதாக அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
பக்வந்த் மான்

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த முடிந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை வென்று முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து முதல்வராக அந்தக் கட்சியின் பகவன்ந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பகவந்த் மான் முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து, பல்வேறு திட்டங்களை அறிவித்துவருகிறார். `யாராவது லஞ்சம் கேட்டால் அதை வீடியோ அல்லது ஆடியோவாக எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் மூலம் மாநில மக்கள் ஊழல் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான்
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான்

இந்த நிலையில் தற்போது, ``பஞ்சாப் மாநிலத்தில் மக்களின் வசதிக்கேற்ப இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். அதிகாரிகள் குடும்ப அட்டைதாரர்களிடம் ரேஷன் பொருள்களை வழங்குவதற்கான நேரம் கேட்டு விநியோகம் செய்யப்படும்'' என முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இதே திட்டத்தை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியிலும் செயல்படுத்த முயன்றார். ஆனால், மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அது முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism