Published:Updated:

`பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம்!' -பேரவையில் அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியை 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட வேண்டும்'

`பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது பூர்த்தி அடையும்போது அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் வழங்கப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் சில முக்கியத் திட்டங்களை இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

அதில், ``மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியை 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட வேண்டும்'என்ற ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து பெற்றோர் இல்லாமல் வளரும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் சமூக -பொருளாதாரப் பாதுகாப்பு நலன் கருதி அதற்கான சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டார். அதில் ஆதரவற்று வளரும் பெண் குழந்தைகளுக்கு அவர்களுக்கு 21 வயது பூர்த்தி அடையும் போது 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்ற மற்றோர் அறிவிப்பையும் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அரசின் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள வளர்ப்பு பெற்றோருக்கான தொகை 4,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

`23 பக்க விண்ணப்பம்; ஏகப்பட்ட சான்றுகள்!- மகப்பேறு நிதியுதவித் திட்டமும் கனிமொழியின் ஆலோசனையும்

தமிழக அரசு ஏற்கெனவே, பெண்குழந்தைகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பெண்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் ஆதரவற்ற பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. முதல் திட்டத்தில், கல்வித் தகுதி இல்லாமல் உள்ள பெண்களுக்குத் திருமணத்தின்போது 25,000 ரூபாய் திருமண நிதியுதவியும் தாலிக்கு 8 கிராம் தங்கத்தையும் வழங்குகிறது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

அதைத் தொடர்ந்து இரண்டாவது திட்டத்தில் தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றுள்ள பெண்களுக்குத் திருமணத்தின்போது 50,000 ரூபாய் நிதியும், தாலிக்கான தங்கமும் வழங்கி வருகிறது. இந்தத் திட்டங்களோடு ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக மற்றொரு திட்டத்தையும் தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு