Published:Updated:

`ஆணவக் கொலைகள் அனைத்து ஆட்சிகளிலும் நடப்பதுதான்!' - எடப்பாடி பழனிசாமி

செ.சல்மான் பாரிஸ்
ஈ.ஜெ.நந்தகுமார்
வி.சதிஷ்குமார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி ( வி.சதிஷ்குமார் )

நெல்லையில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொள்ள விமானம் மூலம் இன்று மாலை மதுரை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியினர் பல்வேறு இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
ஈ.ஜெ.நந்தகுமார்

சாலை மார்க்கமாக நெல்லை செல்லும் முதலமைச்சருக்கு அமைச்சர் செல்லூர் ராஜு மண்டேலா நகரிலும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருமங்கலத்திலும், ராஜன் செல்லப்பா பெருங்குடியிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனர். அதற்கு முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அவர் பேசுகையில், ``ஆணவக்கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது. எல்லா ஆட்சிக் காலத்திலும் இது போன்ற சம்பவம் இயல்பாக நடந்து வருகிறது. நீட் தேர்வு பற்றி மத்திய அரசுடன் பல முறை பேசியுள்ளோம். ஏற்கெனவே 2010-ல் தி.மு.க, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்த நீட் தேர்வு நோட்டிபிகேஷன் போடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
வி.சதிஷ்குமார்

மக்களிடையே எதிர்ப்பு வந்த காரணத்தால்ல் அந்தப் பலியை எங்கள் மேல் திருப்பி விடுகிறார்கள்'' என்றவரிடம், ``எந்தத் தேர்தலையும் சந்திப்பேன் என்று முன்பு கூறிய தினகரன், வேலூர் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கி உள்ளாரே" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ``இது பற்றிய டி.டி.வி.தினகரனிடம்தான் கேட்க வேண்டும். கடந்த தேர்தல் முடிவு மூலம் தனக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை அவரே தெரிந்துகொண்டார். அதனால் வேலூர் தேர்தலிலிருந்து வெளியேறிவிட்டார்" என்றார். தொடர்ந்து,

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி
ஈ.ஜெ.நந்தகுமார்

``தேர்தல் உடன்படிக்கையின்படி ராஜ்யசபாவில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் வழங்கிவிட்டோம். மேலும் இரண்டு இடத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவருக்கும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கும் எம்.பி பதவியைக் கொடுத்திருக்கிறோம். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வை சேர்ந்த இஸ்லாமியர்கள் போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. இதன் மூலம் அந்தக் குறையைப் போக்கியுள்ளோம். மக்கள் நலனுக்காவே பசுமை வழிச்சாலையைக் கொண்டு வந்தோம்'' என்றார்.