Election bannerElection banner
Published:Updated:

மதுரை: `பிரதமரின் தீவிர முயற்சி; நானும் தடுப்பூசி எடுத்துக்கொள்வேன்!’ - முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`நான் டாக்டர் இல்லை. இது பற்றி இந்த நூலில் இருக்கிறது. மருத்துவர், செவிலியர்கள் முதலில் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பயப்பட வேண்டாம்' என்றார் முதல்வர் பழனிசாமி.

நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணியை பிரதமர் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்த பிறகு, தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் `கோவாக்ஸின்’ என்ற பெயரிலும், இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையுடன் இணைந்து புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் `கோவிஷீல்டு’ என்ற பெயரிலும் தடுப்பூசிகளைத் தயாரித்திருக்கின்றன.

இந்தநிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியை பிரதமர் மோடி இன்று காலை தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவைத்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தபோது...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தபோது...

இந்திய மருத்துவ சங்க தேசியத் தலைவர் ஜெயலால், அரசு மருத்துவர் சங்க மாநில தலைவர் செந்தில், தூய்மைப் பணியாளர் முத்துமாரி ஆகியோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் 166 மையங்களிலும், மதுரையில் ஐந்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``இதுவரை இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், பிரதமரின் தீவிர முயற்சியால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும். இன்றைய தினம் மதுரையில் இந்தத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியிருக்கிறது. இரண்டாவது தடுப்பூசி 28 நாள்கள் கழித்து போடப்படும். தமிழகத்தில்166 இடங்களில் போடப்படும். 226 இடங்களில் முதற்கட்டமாக ஒத்திகை செய்யப்பட்டிருக்கிறது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. இது உயிர்ப் பிரச்னை. மக்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தனியார் மருத்துவமனை முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படும். நானும் தடுப்பூசி எடுத்துக்கொள்வேன். நீங்களும் எடுத்துக்கொள்வீர்கள். முதலில் முன்களப் பணியாளர்களுக்குத்தான் முன்னுரிமை” என்றார்.

ஜல்லிக்கட்டு வழக்குகள் பற்றிக் கேட்ட கேள்விக்கு, ``இந்தக் கேள்வி தேவையில்லாதது. இது ஒரு நல்ல நாள். அதைப் பற்றிப் பேசுவோம்” என்றார்

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

`ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு இம்யூனிட்டி பவர் இருப்பதற்கு என்ன அளவுகோல் பார்க்கப்படுகிறது?” என்ற கேள்விக்கு, ``நான் டாக்டர் இல்லை. இது பற்றி இந்த நூலில் இருக்கிறது. மருத்துவர், செவிலியர்கள் முதலில் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால் பயப்பட வேண்டாம்” என்றார்.

சில மாநிலங்களில் தடுப்பூசி ஏற்றுக்கொள்ளப்படாதது பற்றிக் கேட்டதற்கு, ``பாரதப் பிரதமர் தொடங்கிவைத்தார். அதனால் நாங்கள் செய்திருக்கிறோம். மருத்துவர்கள்தான் முதலில் போட்டுக்கொள்கிறார்கள். அதனால் இது சரியானதுதான்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு