Published:Updated:

``அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு... திமுக போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி" - ஸ்டாலின்

ஸ்டாலின்

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.

``அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு... திமுக போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி" - ஸ்டாலின்

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.

Published:Updated:
ஸ்டாலின்

கிராமப்புறத்தில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ உயர் படிப்புகளில் 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. அதையடுத்து, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதியரசர்கள் எல்.என்.நாகேஸ்வரராவ், கவாய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அப்போது, கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவிகித ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினர். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுவருகின்றனர்.

தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 உச்ச நீதிமன்றம் உத்தரவு
உச்ச நீதிமன்றம் உத்தரவு

அந்த அறிக்கையில், ``மருத்துவ மாணவர்கள் இழந்த உரிமை, 5 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று தி.மு.க ஆட்சியினால், சட்டப் போராட்டத்தினால் கிடைக்கப்பெற்றுள்ளது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இப்போது கிராமப்புற மருத்துவ சேவையைப் பெருக்க அந்தப் பகுதிகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

சமூகநீதியை மதிக்காத ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு பதிலளிக்கும்விதமாக, சமூகநீதியைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு மகத்தானது. இதேபோல் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வு போராட்டத்திலும் சமூகநீதி நிச்சயம் வெல்லும். அதற்காக, திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism