Published:Updated:

``திமுக அரசு விளிம்புநிலை மக்களுக்கானது'' - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்த மாணவியின் வீட்டில் இட்லி, மெதுவடை, நாட்டுக்கோழிக் குழம்புடன் முதலமைச்சர் காலை உணவு சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

``திமுக அரசு விளிம்புநிலை மக்களுக்கானது'' - முதல்வர் ஸ்டாலின்

நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்த மாணவியின் வீட்டில் இட்லி, மெதுவடை, நாட்டுக்கோழிக் குழம்புடன் முதலமைச்சர் காலை உணவு சாப்பிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள நாடோடி இன மக்களுக்கு விரிவான காப்பீடு அட்டை, குடும்ப அட்டை, வியாபாரிகளுக்கு கடனுதவி போன்ற நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாடோடி இனப் பள்ளி மாணவிகள் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வீட்டுக்குச் சென்று இட்லி, மெதுவடை, நாட்டுக்கோழிக் குழம்புடன் காலை உணவு சாப்பிட்டார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ``அஸ்வினி என்ற நாடோடி சமூகப் பெண்ணுக்கு அன்னதானம் வழங்க மறுக்கப்பட்டுள்ளதை அறிந்து நானும் வருத்தப்பட்டேன். திமுக அரசு விளிம்புநிலை மக்களுக்கானது. மக்கள் அரசைத் தேடி வர வேண்டாம். நாங்கள் மக்களை தேடிவந்து அடிப்படை வசதிகளை செய்து தருகிறோம்.சென்னை மேயராகவும், அமைச்சராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியில் உங்களோடு பங்கேற்றிருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. விளிம்புநிலையில் உள்ள பெண்கள் துணிச்சலாகப் பேசுவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இதுதான் திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமைக் குரல்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism