Published:Updated:

ஆன்லைன் ரம்மி... அவசரச் சட்டம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வர, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் புதிய குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி... அவசரச் சட்டம்: ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் உத்தரவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வர, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் புதிய குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

ஆன்லைன் விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. இது தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு இது தொடர்பாக இன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்தக் குறிப்பில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதி இழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறிய வேண்டும். இந்த விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராய வேண்டும். மேலும் இந்த விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்து ஆய்வு செய்து அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல் கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே, இ.கா.ப ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் குழு, இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்தச் சமூகப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணவேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இந்தச் சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism