Published:Updated:

``உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் படியுங்கள்..." - `நான் முதல்வன்' திட்ட தொடக்க விழாவில் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

``அனைவரையும் உள்ளடக்கிய அனைத்துத் துறை வளர்ச்சி இதுதான் `திராவிட மாடல்.’ எனவே, எனது கனவுத் திட்டமான இதை இன்று தொடங்கிவைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்." - ஸ்டாலின்.

``உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் படியுங்கள்..." - `நான் முதல்வன்' திட்ட தொடக்க விழாவில் ஸ்டாலின்

``அனைவரையும் உள்ளடக்கிய அனைத்துத் துறை வளர்ச்சி இதுதான் `திராவிட மாடல்.’ எனவே, எனது கனவுத் திட்டமான இதை இன்று தொடங்கிவைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்." - ஸ்டாலின்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு இன்று அவர் தமிழக அரசின் சார்ப்பில், `நான் முதல்வன்' எனும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்ட விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான், அனைத்து மாணவர்களும் முதல்வர்களாக வேண்டும் என விரும்புகிறேன்.

 மாணவர்கள்
மாணவர்கள்

அதற்காகத் தொடரப்பட்டுள்ள எனது கனவுத்திட்டம்தான் `நான் முதல்வன்’ திட்டம். இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் 33 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருக்கிறது எனப் பெருமைப்பட்டுக்கொள்கிற நாம், திறமைக் குறைவு பற்றியும் கவலைப்பட வேண்டும்.

இந்தியாவின் இளைய சக்தியைப் பார்த்துத்தான் உலகம் பயப்படுகிறது. எனவே, அந்த இளைய தலைமுறையை திறமைகொண்டதாக மாற்றத்தான் இந்தத் திட்டம். நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகமாகிக்கொண்டே செல்வதால் போட்டிகளும் அதிகரித்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஸ்டாலின்
ஸ்டாலின்

எனவே, உங்களுக்கு என்ன விருப்பமோ அதைப் படியுங்கள். அதற்கு இந்தத் திட்டம் உங்களின் திறமையை வளப்படுத்த வழிகாட்டும். படிப்பு, பட்டம் சார்ந்தது மட்டுமல்ல... அது திறன் சார்ந்ததாக மாற வேண்டும். தமிழ்ச் சமூகத்தின் அனைத்து இளைஞர்களையும் தமிழ்நாடு அரசு தகுதிசாற் மனிதர்களாக மாற்ற நினைக்கிறது இந்த அரசு.

அனைவரையும் உள்ளடக்கிய அனைத்துத் துறை வளர்ச்சி... இதுதான் `திராவிட மாடல்.’ எனவே எனது கனவுத் திட்டமான இதை இன்று தொடங்கிவைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்" எனப் பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism