Published:Updated:

ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறைகள் மீதான அதிருப்தியைப் போட்டுடைத்த ஸ்டாலின் - பின்னணி என்ன?!

அதிகாரிகள் - முதல்வர் ஆய்வுக்கூட்டம்

``அரசுத் துறைச் செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் அதிகாரிகள் இணக்கமாகச் செயல்பட்டு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” எனப் பேசியிருக்கிறார். அதன் பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்.

ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறைகள் மீதான அதிருப்தியைப் போட்டுடைத்த ஸ்டாலின் - பின்னணி என்ன?!

``அரசுத் துறைச் செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்களுடன் அதிகாரிகள் இணக்கமாகச் செயல்பட்டு அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” எனப் பேசியிருக்கிறார். அதன் பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்.

Published:Updated:
அதிகாரிகள் - முதல்வர் ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசுத்துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. இதில், பேசிய முதல்வர் ஸ்டாலின், ``சில திட்டங்களை அறிவிக்கிறோம். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தேவையற்ற காலதாமதம் ஆகிறது. இத்தகைய காலதாமதம் தவிர்க்கப்பட்ட வேண்டும். சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காகச் சிந்தித்துக்கொண்டே இருந்துவிடக் கூடாது. நிதி நெருக்கடியில் நாம் இருக்கிறோம் என்பது உண்மைதான். எனவே, எந்தத் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் தர வேண்டுமோ அந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடுகளை விரைந்து வழங்கி அவற்றைச் செயலாக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும்” எனப் பேசியதோடு பெயர் குறிப்பிடாமல் சில துறைகளின்மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின் | திமுக
முதல்வர் ஸ்டாலின் | திமுக

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் அதிகாரிகளின் கை ஓங்கியிருக்கிறது. முடிவுகளையெல்லாம் அதிகாரிகளே எடுக்கிறார்கள். சில அறிவிப்புகள் மற்றும் ஆணைகள் அமைச்சர்களுக்குத் தெரியாமலேயே அதிகாரிகள் மூலம் வெளியாகின்றன எனப் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்தே முதல்வர் எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார் என்றார்கள். அப்படி அவர் குறிப்பிட்டுப் பேசிய துறைகள் என்னென்ன என்ற விசாரணையில் இறங்கினோம்…

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் தொடர்பாகக் கோட்டை வட்டாரத்தில் பேசினோம். ``துறைச் செயலாளர்கள் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில்தான் நடக்கும். ஆனால், இந்த முறை கலைவாணர் அரங்கில் நடத்தினார். தலைமைச் செயலகத்தில் தன்னைச் சந்திக்க வருபவர்கள் இருப்பார்கள் என்பதால் கூட்டத்தை வேக வேகமாக முடிக்கவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்படுவதால், இந்த முறை கலைவாணர் அரங்கைத் தேர்வு செய்தார் முதல்வர். அப்போதுதான் ஒவ்வொரு துறையாக நிதானமாக ஆய்வு செய்ய முடியும் என நினைத்திருந்தார்.

அதேபோல ஒவ்வொரு துறையாக முதல்வரும் முதன்மைச் செயலாளரும் ஆய்வு செய்தார்கள். நெல் கொள்முதல் நிலையங்களில் மழைநீரில் நெல் மூட்டைகள் வீணாவது குறித்து ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டதோடு, உணவகங்களில் தொடரும் மோசமான உணவு வழங்கல் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இவை தவிர சுற்றுலாத்துறை, வனத்துறை, சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வித்துறை, நிதித்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்டவற்றையும் மனதில்வைத்தே ‘அமைச்சர்களோடு இணைந்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்’ எனச் சொன்னார்” என்றவர்கள்,

ஸ்டாலின்
ஸ்டாலின்

டேஷ் போர்டு விவகாரத்திலும் அனைத்துத் துறை அதிகாரிகளும் மெத்தனமாக நடந்துகொள்வதோடு இதுவரை பல துறைகளின் விவரங்கள் பதிவிடப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி அதிகாரிகளுக்கு எச்சரிக்கைவிடும் தொனியிலேயே பேசினார்” என்றனர்.