Published:Updated:

குறைந்து வரும் கொரோனா தொற்று... நீட்டிக்கப்படுமா இரவு நேர ஊரடங்கு? - முதல்வர் நாளை ஆலோசனை

முதல்வர் ஸ்டாலின்

ஜனவரி 31 வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களாகக் குறைந்துவரும் கொரோனா தொற்று எண்ணிக்கையால் இரவு நேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 31 ஆயிரம் என அதிகரித்துவந்தது. ஆனால் தற்போது கடந்த சில நாள்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிறிய அளவில் குறைந்த வண்ணம் உள்ளது. எனினும், கொரோனா தொற்றால் தினசரி இறப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. வரும் நாள்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் குறையும் பட்சத்தில் ஞாயிறு முழு ஊரடங்கை விலக்கிக்கொள்ளலாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரித்திருந்தார்.

இரவு நேர ஊரடங்கு
இரவு நேர ஊரடங்கு

இந்த நிலையில் ஏற்கனவே ஜனவரி 31 வரை தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதால், கடந்த சில தினங்களாகக் குறைந்துவரும் கொரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு, 31-ம் தேதிக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை (ஜனவரி 27) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர். நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகலாம். மேலும் வரும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் தகவல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism