Published:Updated:

``கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை!" முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

"நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட, தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு மக்களிடத்தில் சேகரியுங்கள்" என்று தி.மு.கழகத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

``கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை!" முதல்வர் ஸ்டாலின்

"நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட, தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு மக்களிடத்தில் சேகரியுங்கள்" என்று தி.மு.கழகத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வு மற்றும் வாக்கு சேகரிப்பு குறித்து தி.மு.கழகத்தினருக்கு திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ``கூட்டணிக் கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு நெருடல் ஏற்படாத வகையில் கழகத்தினரின் அணுகுமுறை அவசியம் அமையவேண்டும். திமுக வேட்பாளர் தேர்வு என்பது, ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்று கட்டுக்கோப்பானதாக இருக்கவேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்திடல் நிச்சயமாகக் கூடாது. தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு சென்று, கடும் நிதி நெருக்கடியிலும், அரசு நிறைவேற்றி வரும் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரியுங்கள்.

திமுக செயற்குழு
திமுக செயற்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க தலைமையினால் கடந்த 10 பத்து ஆண்டுகளாக பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள். தமிழக மக்களிடத்தில், மதவெறியை விதைத்து கலவரத்தைத் தூண்டிவிடும் பா.ஜ.க-வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள். சமூக நீதி, சுயமரியாதை, சாதி வேறுபாடற்ற மதநல்லிணக்கம் போன்றவற்றைக்கொண்ட ``திராவிட மாதிரி" அரசாக விளங்கும் தி.மு.க-வின் திட்டங்களும், செயல்பாடுகளுமே தேர்தல் களத்தில் நமக்கான நற்சான்றுகள். நல்லாட்சியின் விளைச்சலை, உள்ளாட்சியில் முழு வெற்றியாக அறுவடை செய்திட அயராது பாடுபடுங்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் ஆணிவேர்" என்று குறிப்பிட்டு கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மகாத்மா காந்தியின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ``மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்!" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism