Published:Updated:

``அரசியல் என் ரத்தத்தில் கலந்தது; எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடவியல்!" - ஸ்டாலின் பேச்சு

முதல்வர் ஸ்டாலின்

``கலைஞரைப் போல எழுதவோ பேசவோ எனக்குத் தெரியாது. கலைஞரைப் போல எழுத முயன்றதுதான் உங்களில் ஒருவன்" - முதல்வர் ஸ்டாலின்

``அரசியல் என் ரத்தத்தில் கலந்தது; எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடவியல்!" - ஸ்டாலின் பேச்சு

``கலைஞரைப் போல எழுதவோ பேசவோ எனக்குத் தெரியாது. கலைஞரைப் போல எழுத முயன்றதுதான் உங்களில் ஒருவன்" - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தன் வாழ்க்கை வரலாற்றை `உங்களில் ஒருவன்' எனும் தலைப்பில் தானே புத்தகமாக எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் பின்பக்க அட்டையில், "சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழி நடத்துவதில் தமிழினத் தலைவர் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர். இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள் தான் என்னைச் செதுக்கியவர்கள்" என ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழாவானது சென்னை வர்த்தக மைய வளாகத்தில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது.

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா

திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் தலைமையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தி.மு.க எம்.பி கனிமொழி, டி.ஆர். பாலு மற்றும் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க அமைச்சர்கள், கழக தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ராகுல் காந்தி `உங்களில் ஒருவன்' நூலை வெளியிட்ட பின்னர், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் வாழ்த்துரை வழங்கி விழாவை சிறப்பித்தனர். இதையடுத்து எம்.பி ராகுல் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின்
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின்

அவரைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ``கலைஞரைப் போல எழுதவோ பேசவோ எனக்கு தெரியாது. கலைஞரைப் போல எழுத முயன்றதுதான் `உங்களில் ஒருவன்'. என் வாழ்நாள் முழுவதும் உங்களில் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று உறுதியாகக் கூறுகிறேன். நான் என்றும் மக்களில் ஒருவன் என்பதைச் சொல்லவே, உங்களில் ஒருவன் என நூலுக்கு பெயர் வைத்துள்ளேன். என்னை பண்படுத்திய கோபாலபுரம் இல்லம் குறித்தது தான் என் சுயசரிதை புத்தகம். நான் பிறந்த வருடம் குலக்கல்வியை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. அரசியல் என்பது என் ரத்தத்தில் கலந்தது. கலைஞர் அமர்ந்த நாற்காலியில் நான் அமர்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி
உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிடவியலின் கோட்பாடு. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே இந்தியாவின் முழக்கமாக மாறியிருக்கிறது. அதைத்தான் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி அழுத்தம் திருத்தமாக கூறினார். திராவிடவியல் கோட்பாட்டை ராகுல் காந்தி முழுமையாக உள்வாங்கியதை அவரின் நாடாளுமன்ற பேச்சுகள் உணர்த்தியிருக்கிறது. இது சட்டத்தின் ஆட்சியாக இல்லாமல் சமூக நீதியின் ஆட்சியாக இருக்க வேண்டும். தற்போது மாநில மக்களின் அதிகாரம் பாதிக்கப்படுவதுடன், மாநில அரசின் உரிமையும் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. தற்போது நீட் தேர்வை எதிர்த்துப்போராடி வருகிறோம்" பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism